Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய 200 சிறுவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை

December 6, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய 200 சிறுவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை

2023 டிசம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச விசேட தேவையுடைய நபர்களின் தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 200 விசேட தேவையுடைய சிறுவர்கள் நேற்று திங்கட்கிழமை (04) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.

இந்த சிறுவர்கள் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரிக்கு வந்ததை அடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை வரவேற்று விசேட வாழ்த்துக்களை தெரிவித்தார்.

விசேட தேவையுடைய சிறுவர்கள் சுமார் 200 பேர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை வரலாற்றில் முதன்முறையாக நடந்த தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும் என்பதை நினைவுபடுத்திய சபாநாயகர் இந்த சிறுவர்கள் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து விசேட தேவையுடைய சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை அனைத்து வகையிலும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதனையடுத்து, இந்த சிறுவர்களுக்கு விசேட தேவையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே ஆகியோரை கலந்துக் கொண்டனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் குறிப்பிடுகையில்,விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, அதனை விரைவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் நினைவுபடுத்தினார்.மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான உள்வாங்கப்பட்ட கல்வியை வழங்குவதற்கான சவாலை புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெற்றிகொள்ள முடியும் என கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன் மூலம் விசேட தேவையுடைய சிறுவர்கள் சாதாரண சிறுவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என கல்வி அமைச்சர் நினைவுபடுத்தினார்.

சிறுவயதிலேயே குழந்தைகளிடம் தோன்றும் குறைபாடுகளைக் கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க பிரத்தியேக இடத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுடன் விசேட தேவையுடைய நபர்களின் உரிமைகளையும் சேர்த்து அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் இயலாமையுடைய சமூகத்தினருக்கு வரி விதிப்பதை தவிர்க்கும் வகையில் வரிக் கொள்கை திருத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவினால் இந்த சிறுவர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் பாராளுமன்ற முறைமை தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விசேட தேவையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகேவின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதற்கான வசதிகளை தேசிய ஜனநாயக நிறுவனம் செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டிருந்தனர்.

Previous Post

தமிழ் இளைஞர்களை அழிக்கவே வடக்கில் போதைப்பொருள் | வினோநோகராதலிங்கம்

Next Post

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் | மைத்திரிபால சிறிசேன

Next Post
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

மாணவர்களை தண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் | மைத்திரிபால சிறிசேன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures