வதிவிட அந்தஸ்து மறுக்கப்பட்ட பேராசிரியருக்கு மீண்டும் கனடா வருவதற்கு அனுமதி!

வதிவிட அந்தஸ்து மறுக்கப்பட்ட பேராசிரியருக்கு மீண்டும் கனடா வருவதற்கு அனுமதி!

 

யோர்க் பல்கலைக்கழக பேராசிரியரான Felipe Montoya, தனது மகனின் Down syndrome நோயின் காரணமாக, கனடாவில் வதிவிட அந்தஸ்து மறுக்கப்பட்டு, தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்ட நிலையில், மீண்டும் அவருக்கு கனடா வருவதற்கு கனேடிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அவருடைய 13 வயதான மகன் Nicolas Montoya, Down Syndrome எனும் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமையினால் அவரது குடிவரவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கனேடிய சுகாதாரப் பராமரிப்பு முறையில் இவரது நோய் ‘பாரிய சுமையை’ ஏற்படுத்தும் என்பதே இதற்கான காரணமாகக் கூறப்பட்டது.

கனேடிய குடிவரவு விதிகளின் படி, குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் கனடாவிற்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து பெற அனுமதிக்கப்பட முடியாதவராகக் காணப்படின், அக்குடும்பத்தில் ஏனையோரும் அதே விதிக்கிணங்கவே கருதப்படுவார்கள்.

இந்நிலையில், தனது சொந்த நாடான Costa Rica இற்கு இந்த வருடம் ஜூன் மாதத்தில் திருப்பி அனுப்பப்பட்ட Montoya குடும்பத்தினர், மீண்டும் கனடா வருவதற்கு கனேடிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் மீண்டும் கனடா வருவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ள Felipe Montoya, கூறுகையில்,

இவ்வருட ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு (வதிவிட அந்தஸ்து மறுக்கப்பட்டமை), கருணை அடிப்படையில் ‘அமைச்சர் மட்ட தலையீட்டின்’ காரணமாக மாற்றப்பட்டதாகவும், தான் மீண்டும் கனடா வந்தவுடன், உடல் ஊனம் தொடர்பான குடிவரவு விதிமுறைகளை மாற்றியமைக்க முயற்சிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *