வகுப்பறைகளிலும் கூடங்களிலும் கைப்பேசிகளை தடை செய்யும் ரொறொன்ரோ மத்திய பாடசாலை!
ரொறொன்ரோ கிழக்கு பகுதி மத்திய பாடசாலை ஒன்று சகல வகுப்பறைகளிலும் மற்றும் கூடங்களிலும் கைப்பேசிகளை தடைசெய்கின்றது.
இச்சாதனங்கள் பாரிய கவனச்சிதறலிற்கு ஒரு முக்கியமானவைகள் என்ற கவலைகள் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறொன்ரோ மாவட்ட கல்வி சபை பேச்சாளர் றயன் பேர்ட் இத்தடை Earl Grey Senior Public School-ல் செவ்வாய்கிழமை நடைமுறைக்கு வருமென தெரிவித்துள்ளார்.
இத்தடை நடைமுறைக்கு வந்ததும் மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளை அவர்களது லாக்கர்களில் வைக்கவேண்டும் என்றும் வகுப்புகளில் வைத்திருக்க கூடாதெனவும் கூறப்படுகின்றது.
பெற்றோர்களின் கவலைகளை செவிமடுத்த பின்னர் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் பாடசாலை கவுன்சிலிடம் சென்று கைப்பேசிகள் பாவனை கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றமையால் இவைகளின் பாவனைகளை கூடுதலாக கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முறையற்ற பாவனை, வகுப்பறையில் பாடநேரங்களில் குறுஞ்செய்திகள் அனுப்புதல், இவைகளினால் பாரிய கவனசிதறல்கள் ஏற்படுவதாக தெரவிக்கப்பட்டது.
இத்தடை பாரிய கவனச்சிதறலை குறைக்கும் என பேர்ட் தெரிவித்தார்.
கைப்பேசிகள் குறிப்பிட்ட பாடங்களிற்கு-கல்வி நோக்கத்திற்காக தேவைப்படும் பட்சத்தில் ஆசிரியரின் அனுமதியுடன் பாவிக்கலாம் எனவும் பேர்ட் தெரிவித்தார்.