Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

லோகேஷ் கனகராஜின் ‘கூலி’யாக மிரட்டும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

April 24, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
லோகேஷ் கனகராஜின் ‘கூலி’யாக மிரட்டும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டு பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

டீசரில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஃபேவரைட்டான எக்சன் காட்சி மூலம் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் அந்தக் காட்சியை சுவாராசியப்படுத்த அவர் நடிப்பில் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘சம்போ சிவ சம்போ..’  பாடலின் வரிகளை ஸ்டைலாக பேசும் காட்சிகளும், பின்னணியில் இளையராஜாவின் ஹிட்டான பாடல்கள் ஒலிப்பதும் ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது. லோகேஷ் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களின் பல்ஸை பிடித்து பார்த்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ரஜினிகாந்தின் திரை தோற்றம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் படத்தின் டீசர் வெளியாகிய குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.‌ இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஆனால் படத்தின் கதை கள பின்னணி தங்க கடத்தல் போன்ற சட்டவிரோத காரியங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதால், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் தான் கதையை சொல்வார் என எதிர்பார்க்க முடிகிறது.  அத்துடன் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் தனக்கான தனித்துவமான சினிமா உலகத்தை படைத்து ரசிகர்களை கவர்ந்து வருவதால் அவரது இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக தெரிவிக்கலாம்.

இதனிடையே  நடிகர் சரத்குமார் நடிப்பில் பி. வாசு  இயக்கத்தில் ‘கூலி’ எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியானது என்பதும், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், ‘கூலி’ எனும் பெயரில் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

முல்லைத்தீவு மாவட்ட யுவதிகள் சைக்கிளோட்டத்தில் வெற்றி

Next Post

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் 

Next Post
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் 

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மன்றில் சாட்சியம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

November 22, 2026
ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures