லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 3 கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் மார்க்கெட் பகுதியில் கத்தியால் குத்தியும் நேற்றிரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், 6 பேர் கொல்லப்பட்டதுடன் 3 கொலையாளிகளை பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. காயமடைந்தவர்களை மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பிரித்தானியாவின் லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததுள்ளதுடன், ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பிரிட்ஜ் ஸ்டேசனில் சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10 மணி அளவில் வெள்ளை நிற வேன் ஒன்று அங்கு நடைபாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது வந்த தகவலில் படி வேனில் ஐந்து தீவிரவாதிகள் இருந்ததாகவும், அவர்கள் மக்கள் மீது மோதியவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது அவர்கள் வைத்திருந்த கத்தியை வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்த சிலரின் தொண்டைய பிளேடால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொடூர சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தற்போது வரை 7-பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒருவர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்த உடனடியாக Borough Market பகுதியில் கத்தியில் இரத்தக்கறையுடன் அங்கு நுழைந்ததாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் துப்பாக்கி சூட்டை நடத்தி அங்கிருந்த மக்களை உடனடியாக கிழே படுக்கும் படி கூறியுள்ளனர்.
இதனால் பெரிதும் பதற்றம் அடைந்த மக்கள் உயிருக்கு பயந்து தங்களுடைய மேஜைக்கு கீழே படுத்தனர். ஆனால் தீவிரவாதிகள் தப்பித்துவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அங்கு சென்ற தீவிரவாதிகள் யாரேனையும் தாக்கியுள்ளனரா, காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து அங்குள்ள Vauxhall பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் வந்ததால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் மற்றும் Borough Market பகுதியில் நடந்த இரண்டு சம்பவங்களுமே தீவிரவாதிகளின் செயலாகத்தான் இருக்கும் என்று பொலிசார் உறுதிபட கூறியுள்ளனர்.