Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான் ப்ளே ஓவ் வாயிலை அண்மித்துள்ளது

May 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான் ப்ளே ஓவ் வாயிலை அண்மித்துள்ளது

ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (19) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 7 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப் போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிபெற்றது.

15 வயதுடைய வைபவ் சூரியவன்ஷி அசுர வேகத்தில் துடுப்பெடுத்தாடி 244.73 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 93 ஓட்டங்களைக் குவித்து ராஜஸ்தான்  றோயல்ஸ்   அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

38 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூரியவன்ஷி 7 பவுண்டறிகளையும் 10 பவுண்டறிகளையும் விளாசி இருந்தார்.

இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ், ப்ளே ஓவ் சுற்றுக்கான வாயிலை அண்மித்துள்ளது.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 221 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.

யஷஸ்வி ஜய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவரும் 39 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஜய்ஸ்வால் 23 பந்தகளில் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து வைபவ் சூரியவன்ஷியும் த்ருவ் ஜுரெலும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

சூரியவன்ஷி ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் லுவான்-ட்றே ப்ரிட்டோரியஸ் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (196 – 3 விக்.)

த்ருவ் ஜுரெல், டொனவன் பெரெய்ரா ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவையான எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

ஜூரெல் 53 ஓட்டங்களுடனும் பெரெய்ரா 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.

மிச்செல் மார்ஷ், ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஜொஷ் இங்லிஸ் 29 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

நிக்கலஸ் பூரன் தனது துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மிச்செல் மார்ஷ், ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பான்ட் 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மிச்செல் மார்ஷ் 57 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 96 ஓட்டங்களைப் பெற்று துரதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரின்  கடைசிக்கு முந்தைய பந்தில் ரன் அவுட் ஆனார்.

பந்துவீச்சில் யாஷ் ராஜ் புஞ்சா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி

Previous Post

கோட்டாபய ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் டீல் ; வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா  

Next Post

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர் துஷாந்

Next Post
கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர் துஷாந்

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர் துஷாந்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு

September 3, 2026
நடிகர் தர்ஷன் கணேசன் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் தர்ஷன் கணேசன் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

September 3, 2026
வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது வெற்றி; ரட்னம் அணிக்கு தொடர்ச்சியான ஏழாவது தோல்வி

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது வெற்றி; ரட்னம் அணிக்கு தொடர்ச்சியான ஏழாவது தோல்வி

September 2, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தனது நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது | சுகாஸ் குற்றச்சாட்டு

September 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures