ரொறொன்ரோ மற்றும் யு.எஸ்.சில் குளிர்கால புயலினால் ஆயிரக்கணக்கான விமானசேவைகள் ரத்து
தவிர்க்க முடியாத பனி புயல் காரணமாக வட அமெரிக்க பயணிகள் அவதிப்படவேண்டிய நிலைக்கு ஆளானார்கள். வியாழக்கிழமை ரொறொன்ரோ மற்றும் யு.எஸ்.சில் 2,800ற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை இரவு 9மணியளவில் கனடிய விமான நிலையங்களிற்கு ஊடாக பயணிக்கும் 2,840விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
01.ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் -46.
02.மொன்றியல்-Pierre Elliott Trudeau விமான நிலையத்தில் 23.
03.ஹலிவக்ஸ் ஸ்ரான்வீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் 18.
04.பிலி பிசப் ரொறொன்ரோ நகர் விமான நிலையத்தில் -10.
05.கல்கரி சர்வதேச விமான நிலையத்தில்-7.
06.வன்கூவர் சர்வதே விமான நிலையத்தில் -7.
07.ஒட்டாவா மக்டொனால்ட்-கார்டியர் சர்வதேச விமான நிலையத்;தில் 6.
08.கியுபெக் சிட்டி ஜின் லெசேக் சர்வதேச விமான நிலையத்தில் 4.
09.நியு யோர்க் நியுவாக் லிபர்ட்n விமான நிலையம் 330விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
10.ஜோன் எவ் கென்னடி விமான நிலையம் 261 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
11.இதே சமயம் Boston’s Logan விமான நிலையம் 325 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.