ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ‘நீண்ட’ மற்றும் ‘மிக கடுமையான’ கோடை வெப்ப அலை!

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ‘நீண்ட’ மற்றும் ‘மிக கடுமையான’ கோடை வெப்ப அலை!

ஒன்ராறியோ தென்பாகத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கி அதிவெப்ப எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் பிரிவு விடுத்துள்ளது.இன்று ஒன்ராறியோவின் தென் பகுதியின் பெரும்பகுதிகளில் வெப்பநிலை ஆக குறைந்தது 30ஆக காணப்படும்.
கோடை காலம் இதுவரை கண்டிராத அளவு ‘நீண்ட’ மற்றும் ‘மிகவும் கடுமையான’ வெப்ப அலை நிறைந்து காணப்படும் என கனடா சுற்றுச்சூழல் எச்சரிக்கின்றது.
குறைந்த பட்ச இரவு நேர நிவாரணத்துடன் உயர் வெப்பநிலை மற்றும் ஈரக்கசிவான நிலைமை வெள்ளிக்கிழமை வரை தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.கிரேட் லேக் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலை நேர வெப்பநிலை குறைந்தது 20களில் காணப்படும்.
வெள்ளிக்கிழமை மழை பெய்யும் வாய்ப்பு எதிர்பாரக்கப்படுவதால் வார இறுதி நாட்களில் வெப்பத்திலிருந்து சிறிதளவு விமோசனம் கிடைக்கலாம்.
சில பகுதிகளில் ஈரப்பதன் மதிப்பு சில பகுதிகளில் 40ஐ அண்மிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதி உயர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் ஏற்படுவதற்கு யு.எஸ்.சிலிருந்து திரும்பும் காற்றுத்திணிவு காரணமென தெரிவிக்கப்பட்டுள்து.

heatheat2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *