ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு வலுவான சாத்தியமான சேதத்தை ஏற்படுத்த கூடிய காற்று எச்சரிக்கை!
கனடா சுற்று சூழல் இன்று ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வலுவான சாத்தியமான சேதங்களை ஏற்படுத்த கூடிய காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு நோக்கி மணித்தியாலத்திற்கு 50கிலோ மீற்றர்கள்வேகத்தில் வன்காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. பிற்பகல் ஆரம்பத்தில் இந்த பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர்கள் வேகம் கொண்ட காற்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சீரற்ற காலநிலை காரணமாக தேசிய வானிலை நிறுவனம் விசேட வானிலை அறிக்கை ஒன்றை ரொறொன்ரோ மற்றும் ஹமில்ரன் அத்துடன் ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கு விடுத்துள்ளது.
இந்த காற்று சில சிறிய மரங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தலாம். மின் தடையும் ஏற்படலாம் என அறிவிக்கப்படுகின்றது.
வலுவான காற்று வீசுவதால் டிரைவிங் நிலைமைகள் கடினமாக இருக்கலாம்.
மாலை அளவில் காற்று குறையத் தொடங்கும் வாய்ப்பு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மழை மற்றும் உயர் வெப்பநிலை 8 C ஆக காணப்படும்