ரொறொன்ரோ பகுதி வீட்டு விற்பனை வீழ்ச்சி!

ரொறொன்ரோ-ரொறொன்ரோ பெரும்பாகத்தில் ஒரு வருடத்திற்கு முன்னய நிலையுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் வீட்டு விற்பனை 20.3சதவிகிதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடாவின் மிகப்பெரிய real estate வாரியம் தெரிவிக்கின்றது.

சகல சொத்துக்களினதும் விற்கும் விலை  கடந்த வருடம் மே மாதம் 752,100 டொலர்களாக இருந்த விலை இந்த வருடம் மே மாதம் டொலர்கள் 863,910ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஏப்ரல் மாதம் 919,614 டொலர்களாக காணப்பட்டது. ஒன்ராறியோ அரசாங்கம் வெளிநாட்டு வாங்குபவர்களிற்கு 15-சதவிகிதம் வரி அமுலாக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து நயாகரா பிரதேசம் தொடங்கி பீற்ற போரோ ஒன்ராறியோ வரை-வேகமாக வளர்ந்து வரும் பகுதியான- இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிக்கப்பட்ட வீடுகளின் விற்பனை 26.3சதவிகிதத்தால் வீழ்ச்சியடைந்த போதிலும் சராசரி விற்பனை விலை 15 சதவிகிதம்-1,141,041டொலர்களாக உயர்ந்துள்ளது.

house1house

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *