பரா ஒலிம்பிக் பாணியிலான பல-விளையாட்டு நிகழ்வுகள்- போரில், ஆயுதப்படை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய மற்றய வீரர்கள் அல்லது நோயுற்றவர்களிற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியினால் உருவாக்கப்பட்ட சர்வதேச இன்விக்டர்ஸ் விளையாட்டுக்கள் ரொறொன்ரோவில் இடம்பெற உள்ளது. இது குறித்து செவ்வாய்கிழமை லண்டன் ரவரில் கூடுகின்றனர்.
இதன் ஆரம்பமாக உணர்ச்சி கோரிக்கை அறை கூவல் ஒன்றை விடுத்து ஆரம்பித்து வைத்தார் இளவரசர் ஹரி .
செப்டம்பரில் ரொறொன்ரோவில் இடம்பெறும் இந்த நிகழ்வில் 90-பேர்களை- ஆண் பெண் இருபாலாரும் – கொண்ட அணி கலந்து கொள்ளும்.
32-வயதுடைய அரச குடும்பத்தவர் ஹரியினால் இந்நிகழ்வு 2014-ல் உருவாக்கப்பட்டது. காயமடைந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் விளையாட்டு என்ற பெயரில் ஒன்றிணைந்து தங்கள் போராட்டங்களின் கவனத்தையும் பெற கூடியதாக அமையும்.
ஆப்கானிஸ்தான் இராணுவ வீரரான இளவரசர் ஹரி ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டு நிகழ்வு அனைத்து அணி அங்கத்தவர்களையும் ஒன்றிணைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விளையாட்டு நிகழ்வு வெற்றி தோல்விக்கும் அப்பாற்பட்டு வீரர்களை மில்லியன் டொலர்களிற்கும் மேலாக உணர வைக்கும் ஒரு நிகழ்வாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
560 total views, 65 views today