ரீ.ரீசி பஸ் உடனான விபத்தில் சாரதி குற்றவாளி என தீர்ப்பு.
Middlefield & Finch சந்திப்பில் 2013ல் நடைபெற்ற T T C பஸ் உடன் Truck உம மோதிய விபத்தின் சாரதி வின்சென் ஆரபிஸ் (43) குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவப்பு சிக்னல் லயிற்றினை கடப்பதற்காக 85 மைல் வேகத்தில் செல்போனில் பேசிக் கொண்டு வாகனத்தினை பிழையான பாதையில் ஓட்டிய போதே இந்த விபத்து நடைபெற்றது எனவும் அறியப்படுகின்றது.
இவ்விபத்தின் போது காரைநகரைச் சேர்ந்த மனோறஞ்சனா கனகசபாபதி (52) அவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு பஸ்ஸில் இருந்த மேலும் 12 க்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு மார்ச் 22ல் வழங்கப்படுகிறது.

