Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட ஆறு பேருக்கு விளக்கமறியல்

May 3, 2019
in News, Politics, World
0

தற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து கைதுசெய்யப்பட் அவரின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட காத்தான்குடியில் நேற்று கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காத்தான்குடியில் தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்தே இந்த தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவ்வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புகளை பேணியதாக கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாய்த்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிகத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த நான்கு பேரும் இதன்போது ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Previous Post

கூழாவடியில் பதற்றம் -பைக்குள் இருந்ததை பார்த்து அதிர்ந்த பாதுகாப்பு பிரிவினர்

Next Post

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Next Post

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures