Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை | சாகர காரியவசம்

July 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சமல் வீட்டில் அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்சர்கள்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமா தற்போது ஆட்சியில் உள்ளது என்பது சந்தேகத்திற்குரியது.

ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்ட மக்களை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

ராஜபக்ஷர்களினால் பிரபல்யமடைந்தவர்களே அரசாங்கத்தை பலவீனப்படுத்தி முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்கள் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இந்த நம்பிக்கையின் காரணமாகவே கூட்டணியில் எம்முடன் ஒன்றினைந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.

அதே போல் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் ஆதரவு வழங்கினார்கள்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பிரபல்யமடைந்தவர்கள் தற்போது துரதிஸ்டவசமாக அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டு நாட்டை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்கள்.தற்போது நாட்டில் அரசாங்கம் என்பதொன்று உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினரும், அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுபவர்களும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுன தலைமையிலானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.ஆகவே கையளிக்க முடியாத பொறுப்புக்கள் எமக்குண்டு.

நாட்டு மக்கள் ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள் ஆகவே மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது எனது பொறுப்பாகும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய மக்களை பொதுஜன பெரமுன ஒருபோதும் கைவிடாது.

நாடு என்ற ரீதியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளோம்.இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல,

நாட்டு மக்கள் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.குறுகிய நோக்கங்களை துறந்து சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் நாளாந்தம் வீழ்ச்சியடைந்து செல்கிறது.சிறந்த சூழல் காணப்பட்டால் மாத்திரமே சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றார்.

Previous Post

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது | சஜித்

Next Post

இலங்கை மகளிர் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

Next Post
இலங்கை மகளிர் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

இலங்கை மகளிர் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures