கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சித்தார்… ஆனால் அவர் குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்டு விட்டார்என சர்வஜன பலய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திலீத் ஜெயவீர(Dilith Jayaweera) தெரிவித்தார்.
கம்பகா மாவட்டத்தின் மீரிகம தொகுதியில் உள்ள ஹாபிடிகம பிரிவில் சர்வஜன சபையை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவன்
நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவன் என்பதால் தான் கோட்டாபய ராஜபக்சவை ராஜபக்ச குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்து ஆட்சிக்கு கொண்டுவர முயற்சித்தேன்.

ஜேவிபி போல எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியலில் நாம் ஈடுபட மாட்டோம் என்று கூறினோம்.
குறிப்பாக, கடந்தகால அரசியலில் இருந்த குடும்ப அரசியலுக்கு எதிராக நின்றவன் நான். ஊழலுக்கு எதிராக நின்றவன். தந்தையிடமிருந்து மகனுக்கு அரசியல் செல்வதை எதிர்த்தவன். அதற்காகவே எனது முழு பலத்துடன் தொடர்ந்து போராடியவன்.
ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய
உண்மையில், கோட்டாபய தனது எளிய வீட்டில் இருந்து, பாதுகாப்பு வீரர்களை அகற்றி, அலுவலகங்களில் புகைப்படங்களை அகற்றி, மற்றவர்கள் பொய்யாக செய்தவற்றை உண்மையாக செய்ய முயற்சித்தார்.

கோட்டாபய ராஜபக்ச உண்மையாகவே சரியான விஷயங்களைச் செய்ய முயன்றார். ஆனால், அவர் தனது குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்டுவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.