Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும் – வஜிர அபேவர்தன

August 31, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரஷ்ய – உக்ரைன் போரை விட இலங்கையின் பொருளாதார யுத்தம் பாரதூரமானது

வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்றிட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

”இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல சட்ட சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

பொருளாதார பரிமாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யார் கொள்கையை முன்வைத்தாலும், அது இந்த சட்டங்களின்படியே செய்யப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த சட்டங்களின்படி நாங்கள் செயல்படுவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். 

எனவே வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த நிபந்தனைகள் திருத்தப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 15 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பினைப் பயன்படுத்தும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும்.

சிலர் திருடர்களைப் பிடிக்க அதிகாரம் கேட்கிறார்கள். ஆனால் இனிமேல் அவன் திருடன் இவன் திருடன் என கூறிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஊழலுக்கு எதிரான சட்டம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முறையிட மட்டுமே வேண்டும்.  திருடர்களைப் பிடிப்பதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்கள் கூட அமைச்சுக்களின் கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்பதற்காக உழைக்கும்போது ஜனாதிபதி அரச ஊழியர்களை மறக்கவில்லை. அரச இயந்திரத்தின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி நன்கு உணர்ந்துள்ளார்.

அதனால்தான் கடந்த காலத்தில் அரச  ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கப்பட்டது. மேலும், 2025 முதல் மாதாந்தம் 25,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, அரசாங்க ஊழியரின் ஆரம்ப சம்பளம் 24% அதிகரிக்கப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளமாக 55,000 ரூபாய் வழங்கும் இலக்கை அடைய இருப்பதாக ஜனாதிபதியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பல்வேறு தரப்பினரும் பல்வேறு முன்மொழிவுகளையும் வாக்குறுதிகளையும் உள்ளடக்கியிருந்தாலும், அந்த வாக்குறுதிகள் யதார்த்தமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

எனவே, அரசு இயந்திரம் கவனமாக செயல்படாவிட்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். 2019இல் அரசு ஊழியர்கள் அந்த தவறை செய்தார்கள். மீண்டும் அந்த தவறை அவர்கள் செய்யக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே தேசிய கொள்கை கட்டமைப்புக்குள் கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார்.

எனவே, அரசு ஊழியர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். 38 வேட்பாளர்களில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, அனுபவம் உள்ள, நாட்டைப் பாதுகாக்கக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்னை தோற்கடித்தாலும் பரவாயில்லை. ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்காதீர்கள். அவரைத் தோற்கடித்தால் முழு நாடும் அழிந்துவிடும்.  சிலிண்டருக்காக நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Previous Post

நாம் உயிரோடு இருக்கும்போதே நீதியை தாருங்கள்… ஈழத் தாய்மாரின் குரலை கேட்குமா உலகம்…. | தீபச்செல்வன்

Next Post

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

Next Post
தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures