Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

March 26, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கும் ‘இனிமேல்’ எனும் சுயாதீன விடியோ இசை அல்பத்தில், அவருடைய ரசிகரும், முன்னணி நட்சத்திர இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.

கமல்ஹாசனின் மூத்த வாரிசும், நடிகையும், இசை கலைஞருமான ஸ்ருதி ஹாசனின் மாயாஜால இசை மற்றும் குரலில் உருவாகி இருக்கும் ‘இனிமேல்’ எனும் சுயாதீன பாடலில் அவர் லோகேஷ் கனகராஜுடன் நெருக்கமாக இணைந்து நடித்திருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் இந்திய அளவிலான நட்சத்திர நடிகையாக ஜொலித்தாலும்… அவருடைய கவனம் எல்லாம் இசையின் மீதுதான் இருக்கும்.

இது அவரே பகிரங்கமாக பகிர்ந்து கொண்ட தகவல். அவருடைய இசையில்.. குரலில் வெளியாகி இருக்கும் புதிய சுயாதீன விடியோ அல்பம் ‘இனிமேல்’. இந்த பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்கள்.

‘கே ஜி எஃப்’ பட புகழ் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த பாடலை இயக்குநர் துவாரகேஷ் பிரபாகர் இயக்கியிருக்கிறார்.

ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் சார்பில் இந்த சுயாதீன வீடியோ இசை அல்பத்தை தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாரம்பரிய கலாச்சாரத்தை உடைத்தெறிந்து, மேலத்தேய கலாச்சார மோகத்தில் திளைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் ஃபாஸ்ட் ஃபுட் காதலையும், பதிவு திருமணத்தையும், சகிப்புத்தன்மையின்மை ப்ளஸ் விட்டுக் கொடுக்காத தன்மையுடனும் வாழத் தொடங்கி இருக்கும் இளம் ஆண் மற்றும் பெண் இடையே ஏற்படும் சிறிய கருத்து முரண்களுக்கான தீர்வாக விவாகரத்து வரை செல்லும் போக்கும்..  பாடலுக்கான காட்சிகளில் எதிரொலித்திருப்பதால் நவீன தலைமுறை இளசுகளுக்கு இந்தப் பாடல் பிடித்திருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் இனிய குரலும்… கமலஹாசனின் பாடல் வரிகள் மற்றும் காந்த குரலும்… லோகேஷ் கனகராஜின் இளமை ததும்பும் தோற்றமும், மேனரிசமும்…  அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால்… ‘இனிமேல்’ பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக சந்தை மதிப்பு சரிந்திருந்த நிலையில், அதனை ‘விக்ரம்’ எனும் படத்தின் மூலம் நிமிர வைத்து, பான் இந்திய அளவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்த்தியவர்.. அவருடைய ரசிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜ். இதற்கு பதிலுதவியாக லோகேஷ் கனகராஜை நடிகராக்கி அழகு பார்த்திருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜிற்கு திரையுலகில் வாழ்த்துக்கள் குவிகிறது.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ ஆகிய படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு, பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898AD’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பாடலாசிரியராக பணியாற்றியிருக்கும் ‘இனிமேல்’ எனும் சுயாதீன விடியோ இசை அல்பத்தில், அவருடைய ரசிகரும், முன்னணி நட்சத்திர இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். கமல்ஹாசனின் மூத்த வாரிசும், நடிகையும், இசை கலைஞருமான ஸ்ருதி ஹாசனின் மாயாஜால இசை மற்றும் குரலில் உருவாகி இருக்கும் ‘இனிமேல்’ எனும் சுயாதீன பாடலில் அவர் லோகேஷ் கனகராஜுடன் நெருக்கமாக இணைந்து நடித்திருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் இந்திய அளவிலான நட்சத்திர நடிகையாக ஜொலித்தாலும்… அவருடைய கவனம் எல்லாம் இசையின் மீதுதான் இருக்கும். இது அவரே பகிரங்கமாக பகிர்ந்து கொண்ட தகவல். அவருடைய இசையில்.. குரலில் வெளியாகி இருக்கும் புதிய சுயாதீன விடியோ அல்பம் ‘இனிமேல்’. இந்த பாடலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்கள். ‘கே ஜி எஃப்’ பட புகழ் புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த பாடலை இயக்குநர் துவாரகேஷ் பிரபாகர் இயக்கியிருக்கிறார். ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் சார்பில் இந்த சுயாதீன வீடியோ இசை அல்பத்தை தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாரம்பரிய கலாச்சாரத்தை உடைத்தெறிந்து, மேலத்தேய கலாச்சார மோகத்தில் திளைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் ஃபாஸ்ட் ஃபுட் காதலையும், பதிவு திருமணத்தையும், சகிப்புத்தன்மையின்மை ப்ளஸ் விட்டுக் கொடுக்காத தன்மையுடனும் வாழத் தொடங்கி இருக்கும் இளம் ஆண் மற்றும் பெண் இடையே ஏற்படும் சிறிய கருத்து முரண்களுக்கான தீர்வாக விவாகரத்து வரை செல்லும் போக்கும்..  பாடலுக்கான காட்சிகளில் எதிரொலித்திருப்பதால் நவீன தலைமுறை இளசுகளுக்கு இந்தப் பாடல் பிடித்திருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் இனிய குரலும்… கமலஹாசனின் பாடல் வரிகள் மற்றும் காந்த குரலும்… லோகேஷ் கனகராஜின் இளமை ததும்பும் தோற்றமும், மேனரிசமும்…  அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால்… ‘இனிமேல்’ பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக சந்தை மதிப்பு சரிந்திருந்த நிலையில், அதனை ‘விக்ரம்’ எனும் படத்தின் மூலம் நிமிர வைத்து, பான் இந்திய அளவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்த்தியவர்.. அவருடைய ரசிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜ். இதற்கு பதிலுதவியாக லோகேஷ் கனகராஜை நடிகராக்கி அழகு பார்த்திருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜிற்கு திரையுலகில் வாழ்த்துக்கள் குவிகிறது.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ ஆகிய படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு, பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898AD’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

Next Post

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து விடை பெற்றார் பஸால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவதுநாளாக கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் ; ரவிகரன் எம்.பியும் பங்கேற்பு

மட்டக்களப்பில் உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result