Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல்

June 2, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்த பயணித்த விமானம் யாருடையது? | திருப்பதி விஜயத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

யாழ். பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (CID) உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள (India)அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை(29) நாடு திரும்பிய நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஊடகமொன்று அமைச்சர் ஆனந்த விஜயபாலவை தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு சட்டங்கள்

அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை.

அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன். அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் | Tamil Refugee Arrested In Airport Ananda Wijepala

ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின்கொள்கை அல்ல.

அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

அநுர அரசு பகிரங்க அழைப்பு

அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும். அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல் | Tamil Refugee Arrested In Airport Ananda Wijepala

ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது“ என தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை(29) நாடு திரும்பிய நபர் பலாலி விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

Next Post

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் – கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் – அதிகார மமதையில் அதிகாரிகள்

Next Post
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures