Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் – இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?

March 27, 2022
in News, இந்தியா
0
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் (கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான மற்றுமொரு சிறப்பு குழு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு வருகை தரவுள்ளதாக டெல்லி தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த உயர் மட்ட குழுவினரின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளன.

இந்த விஜயத்தின் போது  முக்கிய விடயமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தினை திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த உத்தியோகப்பூர்வமான இறுதி அறிவிப்பை டெல்லி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இவ்வாரம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர்(கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.

அதேபோன்று மற்றுமொரு சிறப்பு விமானத்தில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவும் விஜயம் மேற்கொள்கின்றன.

குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று செவ்வாய்க்கிழமை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

மறுப்புறம் யாழ் – இந்திய கலாச்சார மையத்தை திறந்து வைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த மையத்தை  பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.  இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ்.

இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும் என்பதாலேயே பிரதமர் நரேந்திர மோடியின் விசேட திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் யாழ். இந்திய மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு  கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில்  திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.

குறிப்பாக யாழ் – இந்திய கலாசார நிர்வாகம் தொடர்பில் காணப்பட்ட நெருக்கடிகளே  தாமதத்திற்கு முக்கிய காரணமாகியது. இராணுவத்தின் பராமரிப்பின் கீழ் யாழ் – இந்திய கலாசார மையத்தை முன்னெடுக்க இலங்கை தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை டெல்லி விரும்பவில்லை.

மாறாக மாகாண சபை அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் இந்த கலாசார மையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவே  டெல்லி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட இந்த பிரச்சினைக்கு  தற்போது சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. எனவே இனியும் தாமதிக்காது யாழ் – இந்திய கலாசார மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க  டெல்லி தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் நாளை திங்கட்கிழமை எளிமையான முறையில் இந்த திறப்பு விழா அமையப்பெறும் இதன் போது பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் ஊடாக கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்தாகியது’

Next Post

பேதங்களை மறந்து அனைவரும் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது | ஐ.தே.க

Next Post
ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டி

பேதங்களை மறந்து அனைவரும் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது | ஐ.தே.க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

NPP அராங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம்…!

August 30, 2026
‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

‘என்ன விலை’ படத்தின் மூலம் வெள்ளி விழா கொண்டாடும் நடிகர் கருணாஸ்

August 30, 2026
ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures