Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்

October 7, 2017
in Life, News, Politics
0
யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்

11 கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை முன்­பாக நாளை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் போராட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.
தமிழ்த் தேசிய பண்­பாட்டு பேரவை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.
இது தொடர்­பில் பேரவை அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் தொற்று நோய்­கள் மூல­மான இறப்­பு­க­ளைத் தடுப்­ப­தற்கு அதி­யுச்ச தொற்று நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.
பொதுக் கட்­ட­டத்­தில் உள்ள பிர­சவ விடுதி மற்­றும் குழந்­தை­கள் விடுதி என்­பன தனி­யான கட்­ட­டத் தொகு­திக்கு மாற்­றப்­ப­ட­வேண்­டும்.
சிறப்­புக் கவ­னிப்­புத் தேவைப்­ப­டும் குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு நிலை­யத்­துக்கு (பேபி றூம்) அருகே உள்ள சுவாச நோய் சிகிச்சை நிலை­யம் உட­ன­டி­யாக வேறு இடத்­துக்கு மாற்­றப்­பட வேண்­டும்.
அதி­தீ­விர சிகிச்சை மற்­றும் தொற்றா நோய்­க­ளுக்­குத் தனி­யான அலகு ஏற்­ப­டுத்த வேண்­டும்.
தீவி­பத்து மற்­றும் தீக்­கா­யம் பட்ட நோயா­ளர்­க­ளுக்­குத் தனி­யான நோய்த் தொற்று ஏற்­ப­டாத வகை­யில் முழு­மை­யான பாது­காப்­பான தனி­யான ஒரு அலகு ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.
தொற்­றும் மற்­றும் தொற்றா நோய்­க­ளுக்­கான சிகிச்சை விடு­தி­க­ளைத் தனித்­த­னிக் கட்­ட­டங்­க­ளில் அமைக்க வேண்­டும்.
நோயா­ளர்­களை மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் அன்­போ­டும், கனி­வோ­டும் நடத்த வேண்­டும்.நோயா­ளர்­க­ளுக்கு ஏற்­ப­டும் சிர­மங்­கள் தொடர்­பாக முறைப்­பாடு செய்­வ­தற்கு வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.
முறைப்­பா­டு­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டன் நடை­பெற வேண்­டும்.
மருத்­து­வ­ம­னை­யில் நிக­ழும் இறப்­பு­கள் தொடர்­பாக உரிய விசா­ரணை மேற்­கொண்டு அதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும்.
நோயா­ளி­க­ளைத் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் பக்­கம் இழுக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் மருத்­து­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.
நீதித்­துறை விசா­ர­ணை­கள் கால­தா­ம­தம் இன்றி மேற்­கொள்­ளப்­பட்­டுக் குற்­றம் தொடர்­பாக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டும். அதன்­மூ­ல­மாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைத் தண்­டிக்க வேண்­டும்.
இந்­தப் போராட்­டத்­துக்கு வடக்கு மாகாணத்­தில்­ உள்ள சகல அர­சி­யல் கட்­சி­கள், பொது­ அ­மைப்­பு­கள், மாதர் சங்­கங்­கள், வர்த்­தக அமைப்­பு­கள், பல்­க­லை­க் க­ழக மாண­வர் அமைப்­பு­கள் அனை­வ­ரை­யும் கலந்து முழு­மை­யான ஆத­ர­வைத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.
அரச மருத்­து­வ­ம­னை­கள் தர­மி­ழந்து போவ­தென்­றால் அவற்றை நம்­பி­யி­ருக்­கும் ஏழை­க­ளின் நிலை என்ன? என்­றுள்­ளது.

Previous Post

பொதுநலவாய விளையாட்டு விழா தீப்பந்தம் 12 ஆம் திகதி முதல் 16 வரை இலங்கையில்

Next Post

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

Next Post

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures