யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்று (29) புதன்கிழமை கனடாவில் காலமானார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமாவார்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.













