Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை

December 8, 2019
in News, Politics, World
0

கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் சம்பவ இடம்பெற்ற வீட்டில் வாடகைக்கு இருந்த கணவன், மனைவியும் வடக்கில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் வலையமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் வாடகைக்கு குடியமர்ந்திருந்தனர். அவர்களுடைய வீட்டுக்கு தினமும் ஆண், பெண் புதுப்புது முகங்கள் வருகை தந்த வந்தமே இருந்தனர்.

சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் தொடர்பில் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊரவர்கள் ஒன்றுகூடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு இருந்த இரண்டு ஆண்கள் மட்டும் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர். எனினும் பெண்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இராநாதன் ஐங்கரன் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற இருவரும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க பின்னடித்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கும் தகவல் வழங்கினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார், அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தோரை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுழிபுரம், சங்கானையைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்த சுமார் 40 -45 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் ஏற்கனே அச்சுவேலிப் பொலிஸ் பிரிவில் வசித்து விபச்சார நடவடிக்கையை முன்னெடுத்தனர் என்ற ஊர் மக்களின் குற்றச்சாட்டால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அந்தக் குடும்பத்துக்கும் கிளிநொச்சி, வவுனியாவில் இயங்கும் விபச்சார விடுதிகளுக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

1900 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Next Post

மருந்து கொள்வனவுக்கு ஒரு பில்லியன் ரூபா விடுவிப்பு

Next Post

மருந்து கொள்வனவுக்கு ஒரு பில்லியன் ரூபா விடுவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures