மைத்திரியை கொலை செய்ய முயன்றது விடுதலைப்புலிகளா? வெடிக்கும் புது சர்ச்சை..! -திசைமாறும் கொலைகள்..!
இப்போதைக்கு அரசியல் மாற்றம் ஏற்பட மகிந்த அணியிடம் இருக்கும் ஓர் பலம் பொருந்திய நபரே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
மகிந்த ஆட்சிக்கவிழ்ப்பு செயற்பாடுகளில் மும்முரமாக செயற்பட ஆரம்பித்ததன் பின்னர் அரசு கோத்தபாயவையும், பசிலையும் குறிவைக்கத் தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் பொன்சேகாவை கருவியாக பயன்படுத்தி லசந்த கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக கோத்தபாய குறிவைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பல கொலைவழக்குகள், மைத்திரியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகளும் ராஜபக்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதன் படி லசந்த கொலை வழக்கு தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. பொன்சேகாவின் சாட்சியின் அடிப்படையில் கோத்தபாய பிரதான சந்தேகநபராக மாற்றம் அடைந்துள்ளார்.
இவை தவிர சர்ச்சை மன்னன் என வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் கோத்தபாயவிற்கு எதிராக செயற்படத் தொடங்கி விட்டார்.
ஊடகங்களை தாக்கியமை, வெள்ளைவேன் கடத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை சுமந்து அடாவடி அமைச்சரான அரசியலில் வலம் வந்தவரே மேர்வின் சில்வா.
அவர் அண்மையில் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு சென்று கோத்தபாயவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து “ இலங்கையில் இடம் பெற்ற அனைத்து கொலைகள், லசந்த விக்ரமதுங்க, பாரத லக்ஷமன், ராகம லொகுசிய்யா கொலை போன்ற அனைத்து கொலைகளுக்கும் காரணம் கோத்தபாயவே.
வெள்ளைவேன் கலாச்சாரமும் அவரைப்பின்பற்றியே நடந்து வந்தது. அதேபோன்று பசில் ராஜபக்ச 600 கோடிகளை திவிநெகும மூலம் சுருட்டினார்.
மேலும் பல வங்கி கொள்ளைகளையும் செய்துள்ளார். டுபாயில் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றும் உள்ளது.
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த மகிந்த சரியாக செயற்பட்டிருந்தால் மைத்திரி பிரிந்து சென்றிருக்க மாட்டார். அத்தோடு அவரை புலிகளிடம் சொல்லி குண்டு வைத்து கொலை செய்யப்பார்த்தவர் பசில் ராஜபக்சவே.
இவ்வாறாக அவர்கள் செய்த அனைத்து குற்றங்களையும் ஆவணப்படுத்தி நான் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளேன் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் முறையாக விசாரணை செய்யப்படின் பசில், மற்றும் கோத்தபாய கைது செய்யப்பட வேண்டிய நிலை உண்டாகும்.
அதேபோன்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் பசில் கைது செய்யப்பட உள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவற்றின் அடிப்படையில் ராஜபக்சர்களை முற்றிலுமாக முடக்க அனைத்து பக்கங்களிலும் வலை விரிக்கப்பட்டுள்ளதாகவும்.,
கூடிய விரைவில் பசில், மற்றும் கோத்தபாயவிற்கு கைது ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.