Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மெரினாவில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை: பணிந்தது ஓபிஎஸ் அரசு

January 18, 2017
in News
0

மெரினாவில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை: பணிந்தது ஓபிஎஸ் அரசு

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் மேற்கொண்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து தங்களுடன் பேசும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

கடற்கரையில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணி நடத்தியும், மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷமிட்டும் போராடி வருகின்றனர். போராட்டம் அமைதியாக நடப்பதை உறுதிசெய்யவும் பாதுகாப்புக்காகவும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மெரினா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு மெரினாவில் போராட்டம் மேற்கொண்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் வைத்து போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

இதற்காக, போராட்டகாரர்களின் பிரதிநிதிகளாக சில இளைஞர்கள் அமைச்சரின் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

Tags: Featured
Previous Post

பூதாகரமாக வெடித்த ஜல்லிக்கட்டு பிரச்னை… வெட்ட வெளிச்சமாகிய விஷாலின் உண்மை முகம்!..

Next Post

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி

Next Post
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures