மூன்றாம்-தரப்பு கடவு சீட்டு நிறுவனங்கள்!. அவதானம்.
கனடிய கடவு சீட்டிற்கு நீங்கள் விண்ணப்பிப்பதாக இருந்தால் போலிகளை நம்பி ஏமாறவேண்டாம் என மத்திய அரசாங்கம் எச்சரிக்கின்றது. ஆன் லைன் நிறுவனங்கள் செயல் முறைகளை துரிதப்படுத்துவாத உறுதியளிப்பதை நம்ப வேண்டாம் என்றும் கனடிய அரசாங்கம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
விரைவான கடவுச்சீட்டு விண்ணப்பங்களிற்கு என பொய்யாக கூறி அதற்கென ஒரு கட்டண தொகையை ஆன்லைன் நிறுவனங்கள் அறவிடுகின்றன என மத்திய அரசாங்கத்தின் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா திணைக்களம் தெரிவிக்கின்றதென அறியப்படுகின்றது.
ஆன்லைனில் கடவுச்சீட்டு சேவைகள் குறித்த தேடுதலின் போது பல ஆன்லைன் நிறுவனங்கள்- மத்திய அரசாங்கத்துடன் தொடர்பற்ற போலி நிறுவனங்கள் கனடிய கடவுச்சீட்டுக்களை வழங்குவதாக திரையில் தோன்றி தெரிவிக்கின்றன.
இவைகளால் எது வித உதவியும் கிடைக்கப்போவதில்லை அனைத்தும் பண செலவு என கூறப்படுகின்றது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற முராரிப் அலி என்பவர் காலாவதியான தனது கடவு சீட்டை புதுப்பிக்க ஆன்லைனில் ஆராய்ந்துள்ளார். PassportOnline.ca என்ற இணையத்தளம் ஒன்றை கண்ட இவர் அவர்களை அழைத்து விபரம் அறிநதார். அவர்கள் கேட்டு கொண்ட டொலர்கள் 330 செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய போது தனக்கு 10வருடங்களிற்கான புதிய கடவு சீட்டுக்கள் இரண்டு-தனக்கும் தனது மனைவிக்கும்-கிடைக்கு மென நம்பினார்.
சில நாட்களின் பின்னர் அஞ்சல் நிலையம் ஒன்றில் இருந்து ஒரு காகித துண்டு இவரது தபால் பெட்டிக்குள் போடப்பட்டிருந்தது.
அதனை எடுத்து கொண்டு அரசாங்க கடவு சீட்டு காரியாலயத்திற்கு சென்ற அலிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எவ்வாறு கட்டணம் செலுத்த போகின்றீர் என ஊழியர் கேட்டதும் அதிர்ச்சியடைந்தார்.
தங்களிற்கு பணம் வரவில்லை என ஊழியர் தெரிவித்ததாக ரொறொனரோ சிரிவி செய்தியாளரிடம் அலி தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு டொலர்கள் 106ஐ செலுத்தி தனக்கும் மனைவிக்குமான கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கின்றது. மேலும்
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை:
ஆன் லைன் கம்பனிகள் செயல் முறைகளை விரைவு படுத்த முடியாது.
கடவுச்சீட்டு சேவைகள் நிலையங்கள் மட்டுமே கட்டணங்களை அறவிடும்.
விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும்.
கடவு சீட்டு தேவை மற்றும் அது குறித்த விளக்கங்களிற்கு கனடா அரசாங்க நிலையங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
இவை குறித்த தகவல்கள் விளக்கங்கள் இலவசமாக அரசாங்கத்திடம் பெற்று கொள்ளலாம்.
கடவுச்சீட்டு ஒன்றை அவரசமாக பெற வேண்டிய கட்டாயம் ஏற்படின் விரைவு படுத்துவதற்கான முறையான வழிகள் உள்ளன. எனினும் அதற்கான அவசர கட்டணம் செலுத்த நேரிடும். எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.