மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா கனடாவின் Toronto நகரிலுள்ள Fairview Library Theatreஇல் கடந்த இரவு நடைபெற்றது. பச்சிமப் புலவர் கான நகரம் என்று பண்டைய காலத்தில் அழைக்கப் பட்ட புலோலியூரில் தனது திண்ணைப் பள்ளியில் தமிழை ஊட்டிய மூதறிஞர் 1965ம் ஆண்டு தனது 63வது வயதில் காலமானார். மூதறிஞரது நினைவாக 2002ம் வருடத்தில் இருந்து வருடா வருடம் Toronto நகரில் புலோலியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை யோகநாதனினால் விழா எடுக்கப் பட்டு வருகிறது. இளம் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நடத்தப் படும் இவ்விழாவில் இளையவர்களின் உரைகள், பாடல்கள், வில்லிசை மற்றும் நடனங்களுடன் சிறார்களுக்கு மதிப்பளிப்பும் இடம் பெற்றது.