Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய இடத்தில் பூசல்!

September 2, 2017
in World
0
அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய இடத்தில் பூசல்!

அரியலூர் மாணவி அனிதாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராகவும் திருமாவளவனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இன்று காலையிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் அனிதாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தரப்பு, ‘அனிதாவுக்கு நேரில் சென்று தினகரன் அஞ்சலி செலுத்துவார்’ என்று தெரிவித்தது. ஆனால், தினகரன் போனால் பிரச்னை நடக்கும் என்று கூறி போலீஸ் அவருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்காது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தினகரன் நேரில் வந்து அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தினகரனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைத்துச் சென்றார். அப்போது தினகரனுக்கு எதிராக ஒரு கோஷ்டி, ‘கழகத்தைக் கூறு போட்டவனே, கட்சியைப் பிளந்தவனே, வெளியேறு!’ என்று கோஷம் போட்டனர். இன்னொரு தரப்பு தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் பதற்றமான சூழலில் தினகரன் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல, தினகரனுடன் வந்த திருமாவளவனுக்கு எதிராகவும் ஒரு தரப்பு, ‘நீட் தேர்வால் இறந்த ஒரு மாணவியின் உடலை வைத்து சாதிய ரீதியாக அரசியல் செய்ய வேண்டாம்’ என்று கோஷமிட்டது. இப்படியொரு தரப்பு கோஷமிட திருமாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசினர். இந்தக் களேபரமான சூழலுக்கு மத்தியில் தினகரனை அருகிலேயே இருந்த திருமாவளவன், அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தார். இப்படி பல்வேறு தரப்புகள் ஒரே நேரத்தில் கூச்சலிட அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போலீஸார் அனைத்துத் தரப்புகளையும் கட்டுப்படுத்தி அடிதடி ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

Previous Post

அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்!

Next Post

மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா – கனடா 2017

Next Post
மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா – கனடா 2017

மூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா - கனடா 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures