Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

முதல் போட்டியில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி!

February 19, 2018
in Sports
0

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 கிரக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணித் தலைவர் டுமினி பந்து வீச்சு தெரிவு செய்தார்.

இதனையடுத்து ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை பேட்டர்சன் வீசினார். ஒருநாள் தொடரில் திணறிய ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 2-வது ஓவரை புதுமுக வீரர் டாலா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த சர்மா, 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸ் உடன் 21 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து ரெய்னா களம் இறங்கினார். இவர் 3-வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார். 4-வது ஓவரை டாலா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தவான் சிக்ஸ் அடித்தார்.

லெக் சைடு வந்த 3-வது பந்தை அடிக்க முயன்றார். பந்து கையுறையில் உரசி விக்கெட் கீப்பரிடம் சென்றது.

ஆனால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் அப்பீல் கேட்கவில்லை. அதேவேளையில் நடுவரும் விக்கெட் கொடுக்கவில்லை.

இதனால் தவான் 17 ஓட்டங்களில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனால் இதே ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரெய்னா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

ரெய்னா 7 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ஓட்டங்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இந்தியா 4.3 ஓவரில் 50 ஓட்டங்களைக் கடந்தது.

மோரிஸ் வீசிய 5-வது ஓவரின் கடைசி இரண்டு பந்தையும் தவான் பவுண்டரிக்கு விரட்டினார். 6-வது ஓவரை டாலா வீசினார்.

இந்த ஓவரில் தவான் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், கோஹ்லி ஒரு பவுண்டரியும் அடித்தனர். இந்தியா பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் 78 ஓட்டங்கள் குவித்தது.

8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோஹ்லி கேட்ச் கொடுத்தார்.

ஆனால் பெஹார்டியன் கேட்ச் பிடிக்க தவறினார். அதன்பின் இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். அதேவேளையில் ஷம்சி வீசிய 10-வது ஓவரின் 3-வது பந்தில் கோஹ்லி எல்பிடபிள்யூ ஆனார்.

அவர் 20 பந்தில் 26 ஓட்டங்கள் சேர்த்தார். விராட் கோஹ்லி அவுட்டாகும்போது இந்தியா 9.3 ஓவரில் 108 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 12-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார்.

தவான் 27 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 39 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தவான் அவுட்டாகும்போது இந்தியா 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு மணீஷ் உடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

19-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி க்ளீன் போல்டானார். அவர் 11 பந்தில் 2 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் சேர்த்தார்.

டோனி அவுட்டாகும்போது இந்தியா 19.1 ஓவரில் 183 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மணீஷ் பாண்டே – டோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 21 பந்தில் 28 ஓட்டங்கள் சேர்த்தது. டோனி அவுட்டானதும் ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார்.

இருவரும் கடைசி 11 பந்தில் 20 ஓட்டங்கள் சேர்க்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. பாண்டியா 7 பந்தில் 13 ஓட்டங்களும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனையடுத்து 204 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது.

துவக்க வீரர்களாக ஸ்மட்சுடன் ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினார். 9 பந்துகளை சந்தித்த ஸ்மட்ஸ் 14 ஓட்டங்களில் புவனேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார்.

தொடர்ந்து டுமினி களமிறங்கினார், 7 பந்துகளை சந்தித்த அவர் 3 ஓட்டங்களில் வெளியேற எஞ்சியவர்களில் பெஹார்டின்(39), கிளாசென்(16), பெஹ்லுக்வயோ(13) ஓட்டங்கள் எடுத்தனர்.

ஹெண்ட்ரிக்ஸ் மட்டும் 50 பந்துகளை சந்தித்து 70 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்காவால் 175 ஓட்டங்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Previous Post

புவனேஷ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு!

Next Post

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் விலகல்!

Next Post
தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் விலகல்!

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் விலகல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures