இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பயணம் செய்த ஹெலிகொப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மும்பையிலிருந்து ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டார்.
ஹெலிகொப்டர் கிளம்பிய சில நிமிடங்களில் காற்றின் வேகம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானி ஹெலிகொப்டரை அவசரமாக தரையில் இறக்க முயற்சித்துள்ளார்.
அப்போது ஒயரில் சிக்கிய ஹெலிகொப்டர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எந்த வித காயமும் இன்றி முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.