Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்பும் – அரசாங்கம்

November 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள வேண்டுகோள் !

மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற தாமதத்தை  எதிர்வரும் இரண்டு நாட்களில் முழுமையாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மீனவர்களுக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று (23) விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

இதற்கமைய, 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய 07 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தும் பணம் செலுத்தாத காரணத்தால் நேற்று (22) மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று (23) மண்ணெண்ணெய் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் இதற்கு தேவையான நிதி வசதிகள் கூட்டுறவு கிராமிய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவ மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு நேற்று (22) முதல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வத்தளை ஹெந்தல, பேருவளை (மீனவத் துறைமுகம்), ஹெந்தல விஜேசிங்க, காலி, அஹுங்கல்ல, தங்காலை, நுரைச்சோலை, புத்தளம், சிலாபம் வெல்ல, சிலாபம் அலுத்வத்த, வல்வெட்டித்துறை, புதுக்குடியிருப்பு, ஊர்காவற்றுறை, மைலிட்டி, தலையடி, குருநகர், களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 28 எண்ணெய் பவுசர்கள் நேற்றைய தினம் (22)  விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 14 துறைமுகங்களில் உள்ள மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படும்.

நவம்பர் 22 ஆம் திகதி முதல் தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே மீனவர்களுக்கு அவசியமான எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் எரிபொருள் தேவை தொடர்பில் தற்போது காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களும் கடற்றொழில் திணைக்களமும் ஆராய்ந்து  வருகின்றன.

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருளைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருப்பின், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அல்லது மாகாண பிரதம செயலாளர்கள், கூட்டுறவுச் செயலாளர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியின் சமூக விவகாரப் பிரிவு, மீனவ சங்கங்களையும், வர்த்தகர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

Previous Post

காதலின் மௌனம் பாடல் வெளியீடு

Next Post

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் : சம்பவம் தொடர்பில் விசாரணை!

Next Post
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள  சிறுநீரக நோய்

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக கடத்தல் : சம்பவம் தொடர்பில் விசாரணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures