Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் பொருளாதாரம் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும்

February 6, 2020
in News, Politics, World
0
மீண்டும் பொருளாதாரம் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும்
அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை. அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த நிலைக்கு சென்றால் 2014 இல் போன்று மீண்டும் பொருளாதாரம் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 6 விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
எமது நான்கரை வருட ஆட்சி காலத்தில் 10 இலடசம் வேலைவாய்ப்புகளை வழங்கினோமா என கேள்வி கேட்கின்றனர். 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கினோமா  இல்லையா என்பதற்கு அப்பால் வரலாற்றில் வேலையற்றோர் சதவீதத்தை குறைத்த அரசாங்கமாகவிருந்தோம்.
அத்துடன் 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசியல் ரீதியாக எவரும் பழிவாங்கப்படவில்லை, எவரின் தொழிலையும்  பறிக்கவில்லை. நாம் அரசியல் ரீதியாக வேலைவாய்புகளை வழங்கியதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் அரசியல் ரீதியில் வழங்கினாலும் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கே வழங்கி இருக்கின்றோம்.  வெளிநாட்டவர்களுக்கு அல்ல. அதனால்  எவரையும் அரசியல் பழிவாங்க வேண்டாம்.
மேலும் மக்களுக்கு பாரிய வாக்குறுதிகளை வழங்கியே  இந்த அரசு ஆட்சிக்குவந்தது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது. சுபீட்சமான நாடு எனக் கூறி பல்வேறு வரிகளை நீக்கியிருந்தனர். இதனால்தான் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரி குறைப்பின் காரணமாக 500 அல்லது 600 பில்லியன்வரை அரச வருமான இல்லாமலாகி இருக்கின்றது. தேசிய வருமானத்தில் இது 25 வீதமாகும். வட் வரி குறைப்பால் மாத்திரம் 180 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய வருமான திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் அரசு வரிகளை குறைத்துள்ள போதிலும் அதற்காக மக்களுக்குச் சலுகைகள் கிடைக்கவில்லை. வரி திருத்தச்சட்டங்கள் எங்கே என அதிகாரிகள் கேட்கின்றனர். வரி திருத்தங்களை மேற்கொள்வதென்றால் அதனை பாராளுமன்றத்திலே மேற்கொள்ளவேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றத்தில் பெறவில்லை. வரிகுறைப்பினால் இல்லாமலாக்கப்பட்டிருக்கும்  நாட்டின் வருமானத்தை எவ்வாறு ஈட்டிக்கொள்வது என்பதை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றார்.
Previous Post

உருவாகிறது தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

Next Post

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

Next Post
யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures