எதிர்வரும் காலங்களில் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் டெங்கு நுளம்பு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்தார்.
மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் வைத்தியசாலை வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.