Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘மிஸ் கோல் காதல்’ நகை பணத்துடன் சென்ற யுவதியை காதலன் உள்ளிட்ட 4 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

January 12, 2022
in News, Sri Lanka News
0
காதலனுக்கு முன்பாக யுவதி கூட்டு வன்புணர்வு! ஐவர் கைது!!

யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும்  பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது,

தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் , அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக , வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து  சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி , உறவு கொண்டுள்ளார். பின்னர் , தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்துள்ளனர்.

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள் , தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் , யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமுறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் , முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றையதினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

வவுனியாவில் உயர்தர மாணவி மாயம் பொலிசார் தீவிர விசாரணை

Next Post

ஆப்கானுக்கு அமெரிக்காவின் 308 மில்லியன் டொலர் நிதியுதவி

Next Post
ஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா

ஆப்கானுக்கு அமெரிக்காவின் 308 மில்லியன் டொலர் நிதியுதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

October 31, 2026
கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

October 31, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் நீதித்துறை – யோஷிதவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

October 31, 2026
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஒ டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தின் அப்டேட்

October 31, 2026

Recent News

ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

October 31, 2026
கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

October 31, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் நீதித்துறை – யோஷிதவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

October 31, 2026
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஒ டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஏ ஓ டி’ திரைப்படத்தின் அப்டேட்

October 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures