Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

December 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக  மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அறவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக  அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (13) முறைப்பாடு செய்திருந்தது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே மேலும் கூறுகையில்,

நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளோம். ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிப்பிற்கு எதிராக  இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளோம்.

அதாவது 30 அலகினை விட குறைந்த அளவில் பாவித்த மின் அலகொன்றுக்கான கட்டணமாக செலுத்தப்பட்ட 8 ரூபாய் தற்போது 60 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். 

30 அலகுகள் பாவித்த ஒருவரின் மின் கட்டணம் இதன்மூலம் 420 ரூபாவாக  செலுத்த வேண்டி ஏற்படும். மேலும் நாட்டு மக்கள் ஜனவரி மாதத்திலிருந்து 2,500 ரூபாவாக  செலுத்த வேண்டி ஏற்படும்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு மின்வலு அமைச்சரை பார்க்கும் போது அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாதாளக் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் போன்று செயற்படுகிறார். பாவனையாளர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை விடுக்கிறார். அதாவது மின்கட்டணத்தை அதிகரிக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் நீண்ட மின்துண்டிப்பை முகங்கொடுக்க வேண்டும் என்கிறார்.

நுகர்வோர்கள் என்ற வகையில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துளோம்

மேலும் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய சாதாரண தெரு மட்டத்திற்கு மாத்திரமே அதிகரிக்க முடியும். அதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படும் என்பது நியாயமற்ற தாகும்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் நியாயமற்ற தாகும். மேலும் இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

Previous Post

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் – சானக வகும்பர

Next Post

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Next Post
தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures