மிதமான வெப்பநிலையுடன் ஆரம்பமாகும் வசந்த காலம்!

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வாழும் மக்களிற்கு ஒரு நற்செய்தியாக அதிகார பூர்வமான வசந்த காலம் மெதுவான ஒரு வெப்பநிலையுடன் ஆரம்பிக்கின்றது.
திங்கள்கிழமை காலை 6.28ற்கு குளிர்காலத்திற்கு பிரியாவிடை சொன்னாலும் குளிர்கால நிலையை விட்டு முற்றிலுமாக வெளியேற இன்னமும் தயாராகவில்லை.
இன்று ரொறொன்ரோவின் அதிஉயர் வெப்பநிலை 8 Cஆக காணப்படுவதுடன் மழை பெய்யும் சாத்திய கூறுகள் 40-சதவிகிதமாக காணப்படுகின்றது.
செவ்வாய்கிழமை பெரும்பாலும் வசந்த காலம் போன்ற உணர்வுடன் காணப்படும்.அதி உயர் வெப்பநிலை 11 C ஆகவும் விண்ணில் சூரிய ஓளியும் காணப்படும்.
வார நடுப்பகுதியில் வெப்பநிலை -2 C ஆக குறைவடையலாம். புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை 4 Cஆக காணப்படும்.
வெப்பமான காலநிலை அடுத்த வாரம் திரும்பும் எனவும் மழைக்கான சாத்திய கூறுகள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

first

springspring2

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *