Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும் – தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட தெரிவிப்பு

November 20, 2021
in News, Sri Lanka News
0
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் | தமிழ்தேசிய மக்கள் முன்னணி
மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள்.
மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தே தீரும்
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட தெரிவிப்பு.
எம் இனத்தின் விடுதலைக்கான உன்னதமான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் துயிலும் இல்லங்களில் இருக்கும் போராட்ட காலங்களில் ஆகுதியான மாவீரர்களின் கல்லறைகளை அதே பன்னிரெண்டு வருடங்களாகவே  ஸ்ரீலங்கா இனவாத அரசு இடித்தொழிக்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என்பதை மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின்  உடைப்பு வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றது.
இந்த சம்பவத்தை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்
ஸ்ரீலங்கா இராணுவத்தினதும், அரச, இராணுவ புலனாய்வாளர்களதும்  மிலேட்சத்தனமான செயற்பாடாக தொடர்வது ஏற்கனவே இடித்தொழித்த துயிலுமில்ல கல்லறைகளின் சிறு பாகங்களை கூட ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உடைத்தெறியும் செயற்பாடுகள் ஒரு புறமாகவும் தமிழ்த் தேசிய பரப்பில் முன்னின்று செயற்படும்  செயற்பாட்டாளர்களை, அவர்களது குடும்பத்தினரை, ஆதரவாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதும், பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்புக்கு அழைத்து மிரட்டுவதும், பின் தொடர்வதும் மறுபுறத்தில் ஸ்ரீலங்கா காவல்துறை மூலமாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்து அதன் மூலமாக நினைவேந்தல்களுக்கான  தடையுத்தரவுகளையும் பெறுவதும், அச்சுறுத்துவதுமாக ஸ்ரீலங்கா பேரினவாத அரசின் மிலேட்சத்தனமான அராஜகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா பேரினவாத அரசே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களாகிய நாம் எம் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை  இப்பொழுது மட்டுமல்ல இந்த உலகில் மானிடம் உள்ளவரை பல தலைமுறை தாண்டியும் நினைவிற்கொள்வோம். ஆகவே நீங்கள் இடித்தொழிக்க வேண்டியது துயிலும் இல்லங்களை அல்ல உலகத் தமிழர்களின் இதயங்களையும், உணர்வுகளையுமே முடிந்தால் அதை செய்யுங்கள் அப்பொழுது தமக்கான  உரிமையை கேட்டு போராடிய ஒரு இனத்தை அழித்த சிங்கள அரக்கர்களாக புத்தரின் வரலாறு இந்த உலகில் மாற்றமடையட்டும்.
தமிழர்களாகிய நாம் இந்த நாட்டில் பல தசாப்த காலங்களாக சிங்கள பேரினவாதிகளான நீங்கள் எங்கள் மீது புரிந்த அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும், ஆள்கடத்தல்களையும் படுகொலைகளையும் எம் கண்முன்னே  பார்த்து இவற்றையேல்லாம் கடந்துதான் இன்றும் வாழ்ந்துவருகின்றோம். ஆகவே உங்களுக்கு வேண்டுமேன்றால் ஒவ்வொரு ஆட்சியும், ஆட்சியாளர்களும் மாறும் போது இது புது புது விடயங்களாக தென்படலாம் ஆனால் எங்களுக்கு இவ் விடயங்கள் அனைத்தும் பழகிய  ஒன்றுதான் எனவே தமிழர்களாகிய நாம் எக்காலத்திலும் இவற்றைக் கண்டு அஞ்சப்போவதில்லை.
ஆகவே வழமை போன்று மாவீரர் நினைவு நாளில் ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுபூர்வமாக  சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்  இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது  என்பதனை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது | ரவிகரன்

Next Post

கொடி நாளை புலிகள் ஒரு போதும் கொண்டாடியதில்லையே!

Next Post
கொடி நாளை புலிகள் ஒரு போதும் கொண்டாடியதில்லையே!

கொடி நாளை புலிகள் ஒரு போதும் கொண்டாடியதில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures