மானிட்டோபா மாகாணத்தை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள்
ஆபத்தை விளைவிக்கும் கடும் குளிரான காலநிலைக்கு மத்தியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவொன்று எல்லை ஊடாக நடை பயணமாக மானிட்டோபா மாகாணத்தை வந்தடைந்துள்ளனர்.
பெண்ணொருவர் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கனடா மானிட்டோபா மாகாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சுமார் 22 மணிநேர நடை பயணத்தின் பின்னர் தாம் கனடாவை வந்தடைந்ததாக 25 வயதுடைய சோமாலியர் ஒருவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவை வந்தடைந்தமையை தாம் மிகுந்த பாதுகாப்பாக உணர்வதாகவும், இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தன்னை சோமாலியாவிற்கு நாடுகடத்தப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்ததை அடுத்தே கனடாவிற்கு பயணிக்க தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
– See more at: http://www.canadamirror.com/canada/81869.html#sthash.NUzo2LJL.dpuf