Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும்

May 4, 2019
in News, Politics, World
0

பல்கலைக் கழக நிர்வாகத்மின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியது. பல காலமாக அவர்களின் அறையில் இருந்த படங்களையும் , ஆவணங்களையும் காரணம் காட்டி மாணவ்கள் கைது செய்யப்பட்டதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராயாவும் , நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களுடன் உரையாடி அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் உரையாடி விடுவிக்க கோரியபோது பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்க முடியாது. எனத் தெரிவித்தனர். அதன்படி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் மே 16 வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு மாணவர்களிற்கும் எதிராக பொலிசார் 4 சட்டங்களின் அடிப்படையில் பொலிசார் தகவல் கொடுத்துள்ளனர். இதில் ஒன்று பயங்கரவாத தடைச் சட்டம் . இரண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டு ஓகஸ்ட்டில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் . மூன்றாவது சிவில் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச பட்டய சட்டம். நான்கவதே 2019-ஏப்பிரல் 22ம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகள். ஆகிய சட்டங்களை மேற்கோள் காட்டி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய காரணத்தினால் இவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாத காரணத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த இரு மாணவர்கள் சார்பிலும் சட்டத்தரணி கே.சயந்தனும் பல்கலைக் கழகம் சார்பில் குருபரன் , சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதேநேரம் குறித்த மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த இணக்கத்தை சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடர.பில் வடக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றினை வெளியட்டுள்ளார். அதிலே வடக்கில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனக் கோரயதாகவும் தவறான கூற்றை வெளிப.படுத்தியுள்ளார். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவரும் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரவில்லை. அப்படியான தவறான கூற்று வந்திருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பல்ல. மாறாக இவ்வாறான கோரிக்கையை விடுத்த ஒரேயொரு நபர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் மட்டுமே ஆகும். இந்த நிலையில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீது மற்றுமோ். குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார் . அதாவது அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றில் எதிர்.க்காமல. விட்டுவிட்டு கைது செய்தவர்களை விடுமாறு பொலிஸ் நிலையம் சென்றதாக.

மேலே கூறப்பட்டதன் பிரகாரம் இந்த இரு மாணவர்களும் அவசர கால விதியின் கீழ் மட்டும் கைது செய்யப்படவில்லை. அதற்கு அப்பாலும் 3 சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சட்ட விதிகளும் அடங்கும் . இந்தச் சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பலர் விக்கினேஸ்வரன் மேல்நீதிமன்றம் , மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த சமயங்களில் பலர் குற்றவாளிகளாக கானப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர். ஆனால் அவசரகாலச் சட்டத்தை கூட்டமைப்பு எமிர்க்கவில்லை எனக் காரணம்காட்டி தன்னை புனிதவானாக காட்ட முனைவது பொருத்தமற்றது.

அவசரகால பிரகடனத்தை கூட்டமைப்பு மட்டுமல்ல எவருமே எதிரக்கவில்லை. ஆனால் அவசர காலம் வேறு அதன்கீழ. செய்யப்படும் அவசரகால சட்ட விதிகள் வேறு. அவசரகால பிரகடனத்தின் பின்பு கொண்டு வந்த அவசரகால விதியில் சில மோசமான விதிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளோம். அதனை உரிய இடத்தில் சவாலுக்கு உட்படுத்துவோம். இங்கே அவசரகால விதிகள் இல்லாதிருப்பினும் இந்த மாணவர்கள் ஏனைய மூன்று விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்க கூடும்.

எனவே விடயங்களை சரியாக அறியாது அல்லது விழங்காமை போன்று பாசாங்கு செய்து விக்கினேஸ்வரன் அறிக்கை வெளியிட்டமை துரதிஸ்டவசமான செயல்பாடாகும். என்றார்

Previous Post

சுகாதார வைத்திய அதிகாரியின் தங்கு விடுதியில் தீவிர தேடுதல்

Next Post

பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கணினி மீட்பு

Next Post

பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கணினி மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures