Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

August 4, 2018
in News, Politics, World
0
மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாத முதலமைச்சர்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னைப் போன்று வாயால் வடை சுடு­ப­வன் நானல்­லன். வடக்கு மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாது இருந்­து­விட்டு ஆடத் தெரி­யா­த­வன் மேடை கோணல் என்­ப­தைப் போன்று வடக்கு முத­ல­மைச்­ச­ரின் கருத்து அமைந்­துள்­ளது.

இவ்­வாறு வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கி­னால் இரண்டு வாரங்­க­ளுக்­குள் வடக்கு வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திக்­காட்­டு­வேன் என்று கூறி­யி­ருந்­தார். அதற்­குப் பதில் வழங்­கிய எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, கூரை ஏறி கோழி பிடிக்­கத் தெரி­யா­த­வன் வானம் ஏறி வைகுண்­டம் போவேன் என்­றா­னாம் என்­பது போன்று முத­ல­மைச்­ச­ரின் கருத்து இருப்­ப­தா­கச் சாடி­யி­ருந்­தார்.இதற்­குப் பதி­ல­டி­யாக எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அவ­ரது கட்சி நீக்­கி­யும் அவைத் தலை­வ­ரின் ஆசிர்­வா­தத்­தி­னால் தொடர்ந்­தும் அந்­தப் பத­வி­யில் இருப்­ப­தா­கத் தவ­ரா­சா­வைச் சாடி­யி­ருந்­தார் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன். அதி­கா­ரங்­க­ளைப் பற்­றித் தெரி­யாது எதிர்க்­கட்­சித் தலை­வர் பேசு­கி­றார் என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

முத­ல­மைச்­ச­ரின் கருத்­துக்கு வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் தானே தயா­ரித்த கேள்வி, பதில் ஊடக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­தா­வது:

கேள்வி: தங்­கள் கட்சி தங்­களை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யும் அவைத் தலை­வ­ரின் ஆசி­யி­னா­லேயே தாங்­கள் அந்­தப் பத­வி­யில் உள்­ளீர்­கள் என­வும், எமது (மாகாண சபை­யின்) அதி­கா­ரங்­களை மற்­ற­வர்­கள் மடக்­கிப் பிடித்­த­தால்­தான் நாங்­கள் (மாகாண சபை) பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றோம் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யுள்­ளாரே. அது­பற்­றித் தங்­கள் கருத்து என்ன?

வல்­ல­வ­னுக்கு புல்­லும் ஆயு­தம்
பதில்: நான் இன்றோ நேற்றோ பத­விக்­காக அர­சி­ய­லுக்கு வந்­த­வ­னும் அல்ல. வாயால் வடை சுடு­ப­வ­னும் அல்­லன். ‘வல்­ல­வ­னுக்­குப் புல்­லும் ஆயு­தம்’ என்­பார்­கள். இருக்­கின்ற அதி­கா­ரங்­களை வினைத்­தி­ற­னா­கச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு ஆளு­மை­யும், விவே­க­மும் தேவை.

மாகாண சபை கடந்த 5 ஆண்­டு­க­ளில் எங்­க­ளுக்கு இருக்­கும் அதி­கார வரம்­புக்­குள் வினைத்­தி­ற­னா­கச் செயற்­பட்டு எத்­த­னையோ விட­யங்­க­ளைச் செயற்­ப­டுத்தி இருக்­க­மு­டி­யும். அந்த இய­லாத் தன்­மையை நிரூ­பிக்க என்­னி­டம் நிறைய ஆதா­ரங்­கள் உண்டு. முத­ல­மைச்­ச­ரைப் பகி­ரங்க விவா­தத்­துக்கு வரு­மாறு கோரி­யுள்­ளேன், தற்­போ­தும் கோரி வரு­கின்­றேன். முத­ல­மைச்­சர் மாகாண சபையை வினைத்­தி­ற­னா­கச் செயற்­ப­டுத்­தி­யுள்­ளார் என்­ப­தைப் பகி­ரங்க விவா­தத்­தில் நிரூ­பித்­துக் காட்­டட்­டும். நான் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அல்ல, அர­சி­ய­லில் இருந்தே ஓய்வு பெறு­கின்­றேன்.

மாகாண சபை­யின் அச­மந்­தப் போக்­கி­னால் நாம் இழந்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களோ ஏரா­ளம். அபி­வி­ருத்தி என்­பது ஏதோ கெஞ்­சிப் பெறும் விட­ய­மல்ல. அது எமது உரி­மை­யின் ஓர் அம்­சம்.

ஆரம்ப கர்த்­தாக்­க­ளில் நானும் ஒரு­வன்
பதவி மோகத்­தி­னால் நான் மாகாண சபை­யின் செயற்­பாட்­டின்­மை­யினை விமர்­சிக்­க­வில்லை. 45 வரு­டங்­க­ளிற்கு மேலாக அர­சி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­றேன். தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான ஆயு­தப் போராட்­டத்­தின் ஆரம்ப கர்த்­தாக்­க­ளில் நானும் ஒரு­வன். பொன் சிவ­கு­மா­ரன், லோறன்ஸ் தில­கர், பொன் சத்­தி­ய­சீ­லன் போன்­றோ­ரு­டன் ஆயு­தப் போராட்­டத்­தின் ஆரம்ப காலங்­க­ளி­லி­ருந்தே செயற்­ப­டு­ப­வர்­க­ளில் நானும் ஒரு­வன். மாவை சேனா­தி­ராசா, வண்ணை ஆனந்­தன், காசி ஆனந்­தன், குட்­டி­மணி, தங்­கத்­துரை, புஸ்­ப­ராஜா, வர­த­ரா­ஜப் பெரு­மாள், பால­கு­மார் போன்­றோ­ரு­டன் சம காலத்­தில் சிறை­யில் இருந்­த­வன்.

அண்­மை­யிற்­தான் அர­சி­ய­லுக்கு வந்த முத­ல­மைச்­ச­ருக்கு நான் இங்கு குறிப்­பி­டும் பெயர்­களே சில வேளை­க­ளில் தெரி­யா­ம­லி­ருக்­க­லாம். எனது அர­சி­யல் செயற்­பாட்­டி­னால் எனது சொந்த வாழ்­வில் இழந்­தவை ஏரா­ளம். நான் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­த­னால் எனது மேற்­ப­டிப்­பிற்­குக்­கூட முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.

அர­ச­மைப்­பில் பங்­க­ளிப்பு
சந்­தி­ரிகா அம்­மை­யா­ரு­டைய ஓகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அர­ச­மைப்பு வரைபு தொடர்­பான அமர்­வு­க­ளில் தொடர்ச்­சி­யா­கப் பங்­கேற்­றுப் பங்­க­ளிப்­புச் செய்­த­வர்­க­ளில் நானும் ஒரு­வன். பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ரண தலை­மை­யி­லான சர்வ கட்சி மாநாட்டு (2006ஃ2007) தொடர் அமர்­வு­க­ளில்; வடக்­கைச் சேர்ந்த தனி மனி­த­னாக நின்று தமி­ழர்­க­ளின் உரி­மையை ஏற்­கும் வண்­ணம் அர­ச­மைப்பு வரை­பினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யி­லான அறிக்­கை­யி­னைத் தயா­ரிப்­ப­தில் பெரிய பங்­க­ளிப்­பினை வழங்­கி­ய­வன்.

தற்­போ­தைய அர­ச­மைப்பு வரை­புக்­கான பொது மக்­கள் கருத்­த­றி­யும் குழு­வின் உறுப்­பி­ன­ராக இருந்து அந்­தக் குழு­வின் அறிக்­கை­யில் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான விட­யங்­க­ளில் 13ஆவது திருத்­தத்­தில் உள்ள குறை­பா­டு­கள் எல்­லா­வற்­றை­யும் நிவர்த்தி செய்­யும் வகை­யில் அந்த அறிக்­கை­யி­னைத் தயா­ரிப்­ப­தில் முழு­மை­யா­கப் பங்­க­ளிப்­புச் செய்­த­வன். அர­ச­மைப்­புச் சபை­யின் மத்தி – மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான உறவு தொடர்­பான உப­கு­ழு­வின் நிபு­ணத்­துவ உறுப்­பி­ன­ராக இருந்து அதன் அறிக்கை வரை­பில் அதே­போல் பங்­காற்­றி­யுள்­ளேன்.

எனது நிலைப்­பாட்­டி­லேயே முத­ல­மைச்­ச­ரும்

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் உள்ள குறை­பா­டு­க­ளினை முழு­மை­யாக இனங்­கண்டு அவற்றை நிவர்தி செய்­யும் விதத்­தில் அர­ச­மைப்பு மாற்­றம் அல்­லது திருத்­தம் அமை­யக்­கூ­டிய வகை­யி­லேயே எனது முன்­மொ­ழி­வு­கள் எப்­போ­தும் அமைந்­தி­ருந்­தன. எனது இந்த நிலைப்­பாட்­டி­னையே முத­ல­மைச்­ச­ரும் கொண்­டி­ருப்­ப­த­னால்­தான் முத­ல­மைச்­சர் சார்­பில், அன்­றைய அமைச்­சர் குரு­கு­ல­ரா­ஜா­வை­யும் இணைத்­துச் சென்று, அர­ச­மைப்­புச் சபை­யின் வழிப்­ப­டுத்­தும் குழு­வின் முன்­னால் நான் பரிந்­து­ரை­களை வழங்­கி­யி­ருந்­தேன்.

பதின்­மூன்­றா­வது திருத்­தச் சட்­டத்­தில் குறை­பா­டு­கள் உள்­ளன அல்­லது அதனை முழு­மை­யா­கச் செயற்­ப­டுத்­து­வ­தில் தடை­கள் உள்­ளன என்­ப­தற்­காக அது முற்­றாக நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய ஒன்­றல்ல. 35 விட­யங்­கள் மாகா­ணத்­திற்­கான விட­யப் பரப்­பாக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விட­யப் பரப்­பு­க­ளினை முற்­றாக மாகாண சபை­யி­னு­டைய அதி­கார வரம்­பிற்­குட்­பட்ட விட­யங்­க­ளா­கச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு ஏறத்­தாழ 300 நிய­திச் சட்­டங்­கள் வரை இயற்ற வேண்­டு­மென நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆனால் இது­வரை வடக்கு மாகாண சபை­யி­னால் பதின்­நான்கு நிய­திச்­சட்­டங்­களே ஆக்­கப்­பட்­டுள்­ளன. நிய­திச் சட்­டங்­களை ஆக்­கு­வ­தற்கு மாகாண சபை­யில் ஆள­ணிப் பற்­றாக்­குறை இருப்­ப­த­னால் துறை­சார் நிபு­ணர்­கள் ஊடாக அவற்­றி­னைத் தயா­ரிப்­ப­தற்கு வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­கள்­கூட உதவ முன்­வந்­தன. அவற்­றி­னைக்­கூ­டப் பாவித்து மாகாண சபைக்கு நிய­திச் சட்­டங்­களை ஆக்­கத் தெரி­ய­வில்லை.

இவர்­க­ளது மந்­தப் போக்­கி­னைக் கண்டு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­தும், நான் மீன்­பிடி தொடர்­பான நிய­திச்­சட்­டத்தை இயற்­றிக் கடந்த பெப்­ர­வரி மாதத்­தில் கொடுத்­தி­ருந்­தேன். இது­வரை அதற்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது. மாகாண சபைக்கு ஒதுக்­கப்­பட்ட விட­யப்­ப­ரப்­பு­க­ளிற்­கான நிய­திச் சட்­டங்­களை ஆக்­கு­வ­தன் மூலமே அவ்­வி­ட­யப் பரப்­பு­க­ளிற்­கான மத்­திய சட்­ட­வாக்­கங்­களை வட மாகா­ணத்­திற்­குள் செய­லி­ழக்­கச் செய்ய முடி­யும்.

அது­வரை மாகாண விட­யங்­க­ளில் மத்­தி­யின் தலை­யீடு சட்ட ரீதி­யா­கத் தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கும். இவ்­வாறு மாகாண சபை­யின் நிறை­வேற்­றுச் செயற்­பாட்­டின்­மை­யினை அடுக்­கிக் கொண்டே போக­லாம். ஆடத் தெரி­யா­த­வர் மேடை கோணல், என்று கூறிக் கொண்டே இருப்­பர் – என்­றுள்­ளது.

Previous Post

ரணிலின் தீர்வு ஏற்க்க முடியாதது – டிலான்

Next Post

194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை

Next Post
194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை

194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures