Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படமாட்டாது – டலஸ்

January 8, 2021
in News, Politics, World
0

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படமாட்டாது. புதிய தேர்தல் முறைமையில் மாகாணசபை தேர்தலை எதிர்காலத்தில் நடத்த  எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையின் சாதக  தன்மையினை உள்ளடக்கி முரண்பாடற்ற தேரதல் முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் டலஸ்  அழகப்பெரும தெரிவித்தார்.

கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன..கொவிட்-19 வைரஸ் தாக்கத்க்கு மத்தியில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும். தேர்தல் முறைமையில் பாரிய சிக்கல் தன்மை காணப்படுகிறது.இதற்கு பல்வேறுஅரசியல் மற்றும் பொது காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன.

மாகாணசபை தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமையுடன் தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே மாகாண சபைதேர்தலை புதிய தேர்தல் முறையில் எதிர்காலத்தில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் சிறந்த நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மூல கொள்கையின் நோக்கம் மறுதழிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேர்தல் முறைமை நகைப்புக்குரியதாக காணப்படுகிறது. அரச நிர்வாகம். ஜனாதிபதி, நாடாளுமன்றம்,மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிமன்றம்  ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் மாத்திரம் இதுவரையில் சிறந்த தேர்தல் முறைமை ஊடாக நடத்தப்பட்டுள்ளது. ஏனைய தேர்தல்கள் காலத்திற்கு  காலம் மாறுப்பட்ட தேர்தல் முறைமைகளில் நடத்தப்பட்டுள்ளது. இது பொருத்தமற்றதாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைகளின் சாதக தன்மைகளை பாதுகாத்து முரண்பாடற்ற  தேர்தல் முறைமையினை புதிய அரசியலமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேர்தல்களை நடத்தும் தேர்தல் முறைமை முரண்பாடற்றதாக காணப்பட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாகக்த்தினால் பாதிக்கப்பட்ட சேவைக் கைத்தொழில் பல மீண்டும் சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொவிட் -19வைரஸ் காரணத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை அரசாங்கத்தின் பலவீனம் என்று எதிர்கட்சியினர் குறிப்பிடுவது பொருத்தமற்றதாகும். பாரிய சவால்கள் எழுந்துள்ளன. அனைத்து சவால்களையும் அரசாங்கத்தினால் மாத்திரம் வெற்றிக் கொள்ள முடியாது.

கொவிட-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சவால்களை வெற்றிக்கொள்ள நாட்டு மக்கள் சுகாதார தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுகாதார வழிமுறைகளை பின்பற்றமுடியாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகள்  நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கையாகும். வெகு விரைவில் அனைத்து சவால்களையும் மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.

Previous Post

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விவகாரத்தை ஐநாவிடம் கொண்டு செல்வதற்கு முயற்சி

Next Post

யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!

Next Post

யாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு

July 18, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழருக்கு 15 வருடங்களுக்கு பின்னர் கிடைத்தது பிணை

July 18, 2026
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

July 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures