கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது.
அனைத்து அரசு துறை ஊழியர்களையும் இன்று முதல் வேலைக்கு அழைக்கும் அரசின் முடிவை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.
ஏற்கனவே இருந்த நேர அட்டவணையின்படி, போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முன்னதாக தெரிவித்துள்ளார்.












