Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்த தன் வாயால் மாட்டிக் கொண்டுள்ளார்- விஜித ஹேரத்

September 13, 2017
in News
0

“சில் ஆடை” விநியோக சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில், தான் சம்பவத்துக்கு பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அதற்கான பொறுப்பு தான் என கூறுவதன் மூலம் இந்நடவடிக்கை திட்டமிட்ட ஒரு செயற்பாடு என்பது தெளிவாவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, பலவத்தவிலுள்ள ஜே.வி.பி.யின் பிரதான காரியாலயத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
19 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தில் அரச அதிகாரி யார் என்பது குறித்து வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 19 ஆவது சரத்தை வாசிக்குமாறு நாம் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்கின்றோம். 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஏற்ப ஜனாதிபதியின் செயலாளர் ஒரு அரச நிறுவாகியாவார். 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முன்னரும் ஒரு அரச நிறுவாகிக்கு அரசியல் யாப்புச் சட்டத்துக்கு முரணா செயற்பட முடியாது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
எமது நாட்டில் அரச நிறுவாகியாகவுள்ள ஒருவர் சர்வதேச சட்டமொன்றையாவது மீறி நடக்க முடியாது. எழுத்து மூல சட்டதிட்டங்களின் அடிப்படையில் அவர் செயற்பட கடமைப்பட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு அரசியல் அமைப்புக்கு மாற்றமாக செயற்பட்டு, லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது.
இன்றுள்ள பிரச்சினை லலித் வீரதுங்க அரசியலமைப்புக்கு ஏற்ப திருடரா? அரசியலமைப்புக்கு எதிரான திருடரா? என்பதல்ல. அவர் அரச நிருவாகி அல்ல எனக் கூறுவதாயின், அவர் ஒரு சாதாரண நபராக இருந்து கொண்டு ரி.ஆர்.சி. யிலிருந்து 600 மில்லியன் ரூபா எடுத்து சில் ஆடை விநியோகிக்க முடியுமா? என்பதாகும்.
அதேபோன்று, இந்நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கையில் உள்ள ஒரு நடவடிக்கையே என மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தால், அது வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும். அது அப்படி பதிவாகவும் இல்லை.
அத்துடன், இந்த ரி.ஆர்.சி. யில் ஒரு வருடத்துக்கான வேலைத்திட்டமாக குறித்த சில் ஆடை விநியோக நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷாக்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான எந்தவொரு எழுத்து மூல சாட்சிகளும் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷாக்கள் தாம் பொறுப்பை ஏற்பதாக கூறுகின்றனர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறும் போது இந்த பொறுப்பை ஏற்க அவர்கள் முன்வரவில்லை. இதனால், இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷவும் லலித் வீரதுங்கவும் சேர்ந்து மிக திட்ட மிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தரம் 5 பரீட்சையில் சிக்கல், உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும்- கல்வி அமைச்சர்

Next Post

வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்

Next Post
வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்

வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures