Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மலாலா பாக்கிஸ்தானிற்கு விஜயம்

October 11, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்கள் நிலை தொடர்பில் மலாலா கவலை

தலிபானின் கொலை முயற்சியிலிருந்து தப்பி பத்து வருடங்களாகின்ற நிலையில் மலாலா யூசுவ்சாய் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தனது 15வயதில் மலாலா ஆப்கானின் தலிபானின் கொள்கைகளை பின்பற்று பாக்கிஸ்தான் தலிபான் குழுவொன்றின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கானார்.

தலையில் காயமடைந்த மலாலா  பிரிட்டனிற்கு உயிர்காக்கும் மருத்துவசிகிச்சைகளிற்காக அழைத்து செல்லப்பட்டார்.

உயிர் தப்பிய மலாலா பின்னர் பெண்களிற்கான கல்வி உரிமைக்காக குரல்கொடுப்பதை தீவிரப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததுடன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்

இந்நிலையில் தான் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் அவர் மீண்டும் பாக்கிஸ்தானிற்கு சென்றுள்ளார்- கராச்சி.

துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் அவர் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதே அவரின் நோக்கமாகும்.

பாக்கிஸ்தானில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை தொடர்ந்தும் ஈர்ப்பதும் முக்கிய மனிதாபிமான உதவி குறித்து கவனத்தை ஈர்ப்பதும் அவரின் விஜயத்தின் நோக்கம் என மலாலா நிதியம் என்ற அவரது அமைப்பு தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானில் கடும் மழை வெள்ளம் காரணமாக 8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள்  ஆபத்தான சுகாதார நெருக்கடியை  எதிர்நோக்கியுள்ளனர்.

மலாலாவின் முன்னாள் பாடசாலை மாணவிகள் தங்கள் பகுதியில் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து( ஸ்வாட் பள்ளத்தாக்கு மிங்கோரா)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தருணத்தில்  மலாலாவின் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

திங்கட்கிழமை பாடசாலை பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சாரதி கொல்லப்பட்டதுடன் மாணவியொருவர் காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து 2000 மாணவிகளும் பெற்றோரும் பாடசாலைகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாக்கிஸ்தான் தலிபான் அமைப்பே இந்த தாக்குதலிற்கு காரணம் என உள்ளுர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்கள் பகுதியில் அமைதி வேண்டும் என வேண்டுகோள் விடுத்து  இன்றும் மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர்.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 2 இலட்சம் இழப்பீடு

Next Post

மினி மரதன் ஓட்டப் போட்டியில் கிளிநொச்சி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

Next Post
மினி மரதன் ஓட்டப் போட்டியில் கிளிநொச்சி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

மினி மரதன் ஓட்டப் போட்டியில் கிளிநொச்சி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures