மறைந்த பிரபல பாடகர் மைக்கல் ஜக்சனின் பண்ணை வீடு விற்பனை சந்தையில்!
கலிபோர்னியா-மைக்கல் ஜக்சனின் நெவர்லாந் பண்ணை வீடு மறுபடியும் விற்பனைக்கு வந்துள்ளது. வீட்டின் கேட்கும் விலை 67-மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கலிபோர்னியா, சான்டா பாபராவிற்கு அருகாமையில் 2,700ஏக்கரிற்குள் அமைந்துள்ள இந்த உடைமை சைகமோர் வலி பண்ணை வீடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் சந்தையில் இருந்த போது இந்த சொத்தின் விலை 100மில்லியன் டொலர்களாக இருந்தது.
12000-அடி பிராதான வதிவிடம் மற்றும் 3700-அடி நீச்சல் தடாகம்.கொண்டது. பண்ணை பகுதியில் டிஸ்னி பாணியில் ரயில் நிலையம் களஞ்சியம் மற்றும் ஒரு fire·house கொண்டது.