மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட ஹம்பர் கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது!
ரொறொன்ரோ ஹம்பர் கல்லூரி வடக்கு வளாக மாணவர்களை பாதித்துள்ள இதுவரை கண்டுபிடிக்கப்படாத மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளதாக ரொறொன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் நோய்க்கான காரணம் குறித்த புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள போதிலும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகின்றது.
உணவு நச்சுத்தன்மை காரணமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும் நோயுற்றதற்கான குறித்த சரியான காரணத்தை கண்டறியும் முயற்சி நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ரொறொன்ரோ சுகாதார பிரிவு மற்றும் கல்லூரி முயன்று வருகின்றது.
நோய்க்கு சிறு உயிரினம் காரணமாகலாம் என சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தாலும் ஒரு வளாக சூழலில் அதன் பரவுதலை தடுப்பது கடினமாக இருக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குடியிருப்பு பகுதிகளில்-தனிப்பட்டவர்கள் நெருக்கமாக வசிக்கும்-பரவும் பருவகால வைரசுகள்- நோரோ நச்சுயிரிகள் போன்றவைகள் பரவுவதை தடுப்பது சவாலானதெனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இந்த நோய் முதல் முதலில் வளாகத்தில் ஆரம்பமானது. வயிற்று வலி வாந்தி போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பமானது.
882 total views, 276 views today
– See more at: http://www.canadamirror.com/canada/79094.html#sthash.tFSluzXQ.dpuf