21-வயதுடைய ஒன்ராறியோ பெண் ஒருவர் வென்ரநில் எனப்படும் மருந்தை விற்ற குற்றத்திற்காக ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
இது மிக கடுமையான தண்டனை என தெரிவிக்கப்பட்டது. வார்ட்டலூவை சேர்ந்த பிரிட்டனி தோர்ன் வென்ரனில் கடத்தல் குற்றத்திற்காக வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜரானார். பாரிய அளவிலான சக்தி வாய்ந்த வலி நிவாரணியான வென்ரனில் நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கலாம் என இவருக்கான தண்டனையை கையளிக்கையில் நீதிபதி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோரன் மற்றும் அவரது காதலன் ஹரமன்பல் சித்து இருவரும் இரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மருந்துகளை விற்றுள்ளனர் என உண்மைகளை ஒப்புக்கொண்ட அறிக்கை ஒன்றின் படி தெரியவந்துள்ளது.
இவர்களது கிச்னர் ஒன்ராறியோ குடியிருப்பு அப்பார்ட்மென்டை பொலிசார் சோதனை செய்த போது கிட்டத்தட்ட 100,000டொலர்கள் பெறுமதியான வென்ரநில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோர்னின் காதலனிற்கு 10-மாதங்கள் சிறைத்தண்டனை அடுத்;தமாதம் அமுல் படுத்தப்படும்.