Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு

September 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அனோஜன் சிவராசா தொடர்பான சம்பவம் குறித்து தகவல் கிடைத்த நாள் முதல், இராஜதந்திர மட்டத்திலும் இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாகவும் தேவையான தலையீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் சார்பில் கடிதம்  

அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக சவுதி அரேபிய அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக இலங்கை ஜனாதிபதியின் சார்பில் சவுதி அரேபிய மன்னருக்கு விசேட கடிதமொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு | Anojan Who Has Been Sentenced To Death In Saudi

குறித்த கடிதத்தை சவுதி அரேபிய மன்னரிடம் நேரடியாகக் கையளிப்பதற்காக, பிரதி சபாநாயகரின் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்த நடவடிக்கையின் ஊடாக அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு வழங்குமாறும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, அனோஜன் சிவராசாவின் வழக்கு நடவடிக்கைகளுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ள பணத்தை அரசாங்கம் மீளச் செலுத்தும் எனவும், எதிர்காலத்தில் இந்த வழக்குக்காக செலவிடப்படும் முழுமையான தொகையையும் அரசாங்கமே ஏற்கும்.

சட்டமா அதிபர் திணைக்களம்

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா ஆகியோர் தங்களது சொந்த செலவில் தலையிட்டு வருகின்றனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு | Anojan Who Has Been Sentenced To Death In Saudi

அனோஜன் சிவராசாவை காப்பாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரை சட்ட ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் எவ்வாறு காப்பாற்றுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு

September 23, 2026
ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

September 23, 2026
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

September 22, 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

September 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures