மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீட்டினுள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத ட்ரோன் கெமராவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 28ஆம் திகதி மன்னார் பேசலைக் கடற்படை முகாம், ட்ரோன் கெமராவினால் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறித்த ட்ரோன் கெமரா காணாமல்போயிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபருக்குத் தொடர்புகள் காணப்படுகிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

