மன்செஸ்டரில் இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல் செய்தியை அறிந்து கனேடியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடொ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜஸ்ரின் ரூடோ, ‘ மன்செஸ்டரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தினால் கனேடியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் உங்கள் எண்ணங்களில் நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரல்ப் கோடேல், பிரித்தானியாவில் இடம்பெற்றது மிகக் கொடூரமான தாக்குதல் என்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அழிவுகரமான செய்தி என லிபரல் மத்திய NDP கட்சித் தலைவர் ரொம் முல்கேயர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர ரொறன்ரோ மேயர் மற்றும் ஒன்ராறியோ முதல்வர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில்; இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.