மனிதனை கடத்தும் ஏலியன்ஸ்! வெளியான பதற வைக்கும் ஆதாரம்

மனிதனை கடத்தும் ஏலியன்ஸ்! வெளியான பதற வைக்கும் ஆதாரம்

பிரித்தானியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் குறித்து ஆய்வு செய்து வந்த வல்லுநர் John Mooner, தன்னை ஏலியன்ஸ் கடத்தி சென்ற அதிர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து John Mooner கூறியதாவது, Devon, Torquay பகுதியில் வைத்து தன்னை சாம்பல் நிற ஏலியன் கடத்திய சம்பவம் செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.

கடத்தல் சம்பவம் எனக்கு நினைவில் இல்லை. எனினும்,தற்போது செயற்கைக்கோள் புகைப்படம் அற்புதமான ஆதாரமாக கிடைத்துள்ளது.

அதில், சம்பவத்தின் போது நான் ஏலியன்ஸை முகத்தில் குத்த முயல்கிறேன். ஆனால், ஏலியன் அதை தடுத்து என் கையை பிடித்து அடிபணிய வைத்து என்னை கடத்தி செல்கிறது.

இந்த சம்பவம் குறித்து எனக்கு நினைவில்லை என்றபோதிலும் , நான் ஏலியன்ஸ் பிடியிலிருந்த 2016 ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளில் இடையிடையில் நடந்த சம்பவங்களை நினைவு செய்ய முயற்சித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று நான் கருப்பு பேஸ்பால் தொப்பி மற்றும் சட்டை அணிந்திருந்தேன். அது செயற்கைகோள் படத்தில் தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *